நதிரா நைபால்
நதிரா, லேடி நைபால் (Nadira, Lady Naipaul) பாக்கித்தான் நாட்டு பத்திரிகையாளர் ஆவார். இவரது இயற்பெயர் நதிரா கான்னும் அல்வி என்பதாகும். 1953 ஆம் ஆண்டில் நதிரா பிறந்தார். காலஞ்சென்ற நாவலாசிரியர் சர் வி. எசு. நைபாலின் மனைவியாகவும் இவர் அறியப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுநதிரா கென்யாவின் மொம்பசா நகரத்தில் பிறந்தார். [1] 16 வயதில் தன்னை விட 26 வயது மூத்த பொறியாளரான அகா ஆசிம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குல் செக்ரா என்ற நயீமா ஆசிம் மற்றும் சுமர் இயக்ரா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். அவர்கள் திருமணம் முடிந்த பிறகு பல்வேறு உறவினர்களுடன் வசித்து வந்தனர். நதிராவின் இரண்டாவது திருமணம் இக்பால் சாவுடன் நடந்தது, அவருக்கு ஒரு மகள் மலீகாவும் ஒரு மகன் நாதிர் சாவும் பிறந்தனர். மலீகாவை வி. எசு. நைபால் பின்னர் தத்தெடுத்தார்.[2]
வி. எஸ். நைபாலை சந்திப்பதற்கு முன்பு பத்து ஆண்டுகள் பாக்கித்தானின் செய்தித்தாளான தி நேசனில் பத்திரிகையாளராக இவர் பணியாற்றினார். நைபாலின் முதல் மனைவி பாட்ரிசியா (முன்பு பாட்ரிசியா ஆலே) இறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1996 ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டபோது அவர் இவரது மூன்றாவது கணவராக ஆனார்.[3]
லேடி நைபாலின் சகோதரர் அமீர் பைசல் அலவி, பாக்கித்தான் இராணுவத்தில் இரண்டு நட்சத்திர படைப் பெருந்தலைவராக இருந்தார், 2008 ஆம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Patrick French, The World Is As It Is: The Authorised Biography of V. S. Naipaul, New York: Alfred A. Knopf, 2008, p. 472 (online).
- ↑ "Isaac Chotiner, "V. S. Naipaul on the Arab Spring, Authors He Loathes, and the Books He Will Never Write", New Republic, December 7, 2012". The New Republic.
- ↑ "Marjorie Miller, "V. S. Naipaul Receives Nobel for Literature", Los Angeles Times, October 12, 2001" இம் மூலத்தில் இருந்து ஜனவரி 20, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130120051807/http://pqasb.pqarchiver.com/latimes/access/84193810.html?dids=84193810:84193810&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Oct+12%2C+2001&author=MARJORIE+MILLER&pub=Los+Angeles+Times&desc=The+World%3B+V.S.+Naipaul+Receives+Nobel+for+Literature&pqatl=google.
- ↑ Mohammad Asghar and Munawer Azeem. "Gunmen Kill Retired General in Rawalpindi Shooting" Dawn, 19 November 2008