நத்தைக் குத்தி நாரை

நத்தைக் குத்தி நாரை தொகு

இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளில் வாழும் வலசை செல்லும் உள்ளுர்ப் பறவை. அலகு பெரியதாகவும், உறுதியாகவும் உள்ளது. மேல் தாடையின் முன்பகுதியில் பல வளைவுகள் உள்ளது. பெரிய கண்களுக்குப் பின்னால் முகம் அமைந்துள்ளது. முகத்தைச் சுற்றிலும், கன்னம், தொண்டையிலும் இறகுகளின்றி தோல் மட்டும் காணப்படும். இறகு அற்ற தன்மை அயோரிஸ் போன்ற பறவைகளில் மட்டுமே தென்படுகிறது. விரல்கள், கூர்மையான நகங்கள் நீண்டுள்ளன.

 
நத்தைக் குத்தி நாரை

ஆண் நத்தைக் குத்தி நாரை தொகு

திறந்த இறகுகளற்ற அலகு பச்சை நிறமாகவும் கீழ்ப்புறம் சிவந்தும் உள்ளது. கண்களைச் சுற்றி இறகின்றியும் கூடுதலான தோல் பகுதியுடனும் காணப்படும். கால்கள் தடித்தும் வெளுத்தாற் போன்றுமிருக்கும். இனப்பெருக்கக் காலத்தில், வால் பகுதியிலுள்ள இறகுகள் குட்டையாகவும், கருமையாகவும், பச்சை நிறம் கலந்தும் காணப்படும். இனப்பெருக்கக் காலம் முடிந்து சாம்பல் நிற இறகுகள் தோன்றும். இளம் குஞ்சுகளின் இறகுகள் மர நிறத்தை ஒத்துள்ளன.

உணவு தொகு

நன்னீர் வாழ் நத்தைகளை உண்ணும். யூனியோ நத்தையை விரும்பி புசிப்பதாக கூறுவர். அலகின் இடையிலுள்ள இடைவெளி, கிளிஞ்சல்களைக் தொடர்ந்து உண்ண பயன்படுகிறது. நத்தைகளைக் கால்களால் பற்றி, ஒட்டு மூடியை உடைத்து அலகை அதன் வழியாகச் செலுத்தி உள்ளிருக்கும் உயிரியை எடுத்துண்கிறது. மீன்களையும், தவளைகளையும் உண்கிறது.

இனப்பெருக்கம் தொகு

டிசம்பர் மாதத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. ஜூன் மாதத்திலும் செய்யக்கூடும் என்பர். டிசம்பர் மாதத்தில் கூட முட்டையிடத் தொடங்கும். இந்தியாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. மியான்மர் போன்ற நாடுகளில் ஜனவரி, ஜூலை, மார்ச் மாதங்களில் செய்கிறது.

கூடு தொகு

சிறு குச்சிகளின் உதவியால் பெரிய கூடுகளைக் கட்டும். ஒரே மரத்தில் பல கூடுகள் அமைத்துக் கொள்ளும். 4-5 முட்டைகள் இடும். முட்டைகள் வெண்மை நிறத்திலிருக்கும்.

[1]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 13
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தைக்_குத்தி_நாரை&oldid=3850869" இலிருந்து மீள்விக்கப்பட்டது