நந்தினி பக்தவத்சலா

இந்திய நடிகை

நந்தினி பக்தவத்சலா ( Nandini Bhaktavatsala ) (பிறப்பு பிரேமா )[1] கன்னடத் திரையுலகில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையாவார். 1973இல் இவர் காடு என்றா கன்னடத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் திரைப்பட தயாரிப்பாளரான பக்தவத்சலாவை மணந்தார்.

சுயசரிதை

தொகு

நந்தினி சென்னை மாகாணத்தில் உள்ள தலச்சேரியில் பிரேமாவாக பிறந்தார். இவரது குடும்பம் மைசூருக்கு குடிபெயர்ந்தது, அங்கு இவரது தந்தை பேராசிரியர். ஓ. கே. நம்பியார், மகாராஜா கல்லூரியில் ஆங்கிலம் & வரலாறு கற்பித்தார். பின்னர், பேராசிரியர் நம்பியார் மத்தியக் கல்லூரியில் பணிக்கு மாற்றப்பட்டபோது குடும்பம் பெங்களூருக்கு குடிபெயர்ந்தது. மவுண்ட் கார்மல் கல்லூரி மற்றும் மைசூர் மகாராணி கல்லூரியில் பட்டம் பெற்றார்.[2] பிரேமா கன்னட திரையுலகின் மூல பக்தவத்சலாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். பக்தவத்சலா கர்நாடக திரைச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.[3] கிரீஷ் கர்னாட்டின் காடு படத்தில் நந்தினி ஏற்று நடித்த பாத்திரம் அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.[2] பிரேமாவுக்கு ஆனந்த ரங்கா, வேத் மனு மற்றும் தேவ் சிறீ ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல், பெங்களூரில் உள்ள சர்வதேச இசை மற்றும் கலை சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.[4]

சான்றுகள்

தொகு
  1. Film World. T.M. Ramachandran. 1973. p. 205.
  2. 2.0 2.1 "21st National Award for Films". Directorate of Film Festivals. Archived from the original on 1 November 2013. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
  3. Film World. T.M. Ramachandran.Film World. T.M. Ramachandran. 1973. p. 205.
  4. "Music Society/Rani Vijaya Devi/Committee & Patrons". International Music & Arts Society. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.

வெளி இணைப்புகள்

தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Nandini

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_பக்தவத்சலா&oldid=4114688" இலிருந்து மீள்விக்கப்பட்டது