நபம் ரெபியா
நபம் ரெபியா (Nabam Rebia) என்பவர் அருணாச்சலப் பிரதேசத்தினைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் அருணாச்சலப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அருணாச்சல பிரதேச சட்டமன்றத்தின் பேரவைத் தலைவராக இருந்துள்ளார்.
நபம் ரெபியா | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 சூன் 2020 | |
முன்னையவர் | முக்குத் மித்தி |
தொகுதி | அருணாச்சலப் பிரதேசம் |
பதவியில் 27 மே 2002 – 26 மே 2008 | |
பின்னவர் | முக்குத் மித்தி |
தொகுதி | அருணாச்சலப் பிரதேசம் |
பதவியில் 27 மே 1996 – 26 மே 2002 | |
முன்னையவர் | நையோடெக் யோங்காம் |
தொகுதி | அருணாச்சலப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 ஆகத்து 1962 ஓம்புலி அஞ்சல், தோய்முக்கு, பபும் பரே மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாஜக |
பிற அரசியல் தொடர்புகள் | இதேகா |
துணைவர் | நாமாம் தம்சாப் |
பிள்ளைகள் | 4 |
முன்னதாக இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக, மாநிலங்களவையில் அருணாச்சல பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதியான தோய்முக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைமையிலான பெமா காண்டு அரசாங்கத்தில் நகர்ப்புற வளர்ச்சி, நகரத் திட்டமிடல், வீட்டுவசதி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சராக இருந்தவர் ஆவார்.[1][2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ராஜ்யசபா இணையதளத்தில் சுயவிவரம் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்