வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி

தேசிய வேளாண், ஊரக வளர்ச்சிக்கான வங்கி(வட்டார வளர்ச்சி வங்கி)
(நபார்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development), சுருக்கமாக (நாபார்ட், NABARD) இந்தியாவின் நிதித் தலைநகராகக் கருதப்படும் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வளர்ச்சிக்கான உச்ச வங்கியாகும்.[3] 1982ஆம் ஆண்டு சூலை 12 அன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டம் ஒன்றின் மூலம் இந்தியக் கிராமங்களில் கடன்வழங்கலை உயர்த்தி விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் இந்த வங்கி நிறுவப்பட்டது.[4] நாபார்ட் வங்கிக்கு "இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை, திட்டமிடல் மற்றும் செயலாக்கம் தொடர்பான விடயங்களில்" முழுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி
நாபார்டின் சின்னம்
நாபார்டின் சின்னம்
மும்பை தலைமையகம்
மும்பை தலைமையகம்
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
துவக்கம்12 சூலை 1982 [1]
மேலாண் இயக்குநர்Dr கே ஜி கர்மகர் [2]
மத்திய வங்கிஇந்தியா
நாணயம் (ரூபாய்கள்)
ஒதுக்குகள்81,220 கோடி (US$10 பில்லியன்) (2007)
வலைத்தளம்www.nabard.org
நாபார்ட் - இந்தியாவின் வளர்ச்சிக்கான உச்ச வங்கி

வரலாறு

தொகு

சிவராமன் குழுவின் பரிந்துரையின்படி சூலை 12, 1982 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சட்டம் 1981" படி நாபார்ட் வங்கி நிறுவப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் வேளாண் கடன் துறை மற்றும் கிராமப்புற திட்டமிடல் மற்றும் கடன் பிரிவு, விவசாய மறுகடன் மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றிற்கு மாற்றாக இவற்றை ஒருங்கிணைத்து நிறுவப்பட்டது.

நபார்டின் பங்கு

தொகு

கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் கிராமப்புறங்களில் விவசாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடன் வழங்குவது தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அதிகாரத்தை வைத்திருக்கும் அமைப்பு நபார்டு ஆகும். கிராம அபிவிருத்திக்கான அபிவிருத்தி திட்டங்களை ஊக்குவிப்பதற்காக முதலீடு மற்றும் உற்பத்தி கடன் ஆகியவற்றை நபார்ட் வழங்குகிறது. அமைப்பின் சீரான செயல்பாட்டிற்காக, நபார்ட் பல மட்டங்களில் ஆட்சேர்ப்பு செய்கிறது. நபார்டு நடத்தும் அதிகாரி ஆட்சேர்ப்பின் முதன்மை நிலை நபார்டு தரம் ஒரு அதிகாரிக்கு.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "25 YEARS OF DEDICATION TO RURAL PROSPERITY". Nabard.org. Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
  2. "Apex Development Bank with a mandate for facilitating credit flow". Nabard.org. Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
  3. "Nabard Rural Innovation Fund | Agriculture and Industry Survey". Agricultureinformation.com. Archived from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
  4. "25 YEARS OF DEDICATION TO RURAL PROSPERITY". Archived from the original on 19 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 11 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "நபார்டின் பங்கு". Archived from the original on 2020-11-08. பார்க்கப்பட்ட நாள் 2020-11-19.

வெளியிணைப்புகள்

தொகு