நபின் சந்திர பர்தோலாய்
நபின் சந்திர பர்தோலாய் (Nabin Chandra Bardoloi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1875 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். அசாம் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் ஓர் எழுத்தாளராகவும் செயற்பட்டார்.[1] ஓர் இந்திய சுதந்திர இயக்க ஆர்வலருமான இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் போது (1920-1922) அசாம் மாநிலத்தில் ஒரு முக்கிய தலைவராக இருந்தார்.[2] அசாம் மாநில மக்களுக்கான இவரது பணிகள் மற்றும் பங்களிப்புக்காக இவருக்கு கர்மவீரர் பட்டம் வழங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு இவரது பிறந்த நூற்றாண்டு விழாவில் இந்திய அரசு இவரது நினைவாக அஞ்சல்தலையை வெளியிட்டது.[3] நபின் சந்திர பர்தோலாயின் மகள் நளினி பாலா தேவியும் ஒரு குறிப்பிடத்தக்க அசாமிய கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். நபின் தனது வாழ்க்கை வரலாற்றை சுமிருதிர் தீர்த்தா (1948) என்று தலைப்பிட்டு எழுதினார்.[4] அசாம் பிரதேச காங்கிரசு பிரிவின் முதல் பொதுச் செயலாளராகவும் இவர் இருந்தார்.
நபின் சந்திர பர்தோலாய் Nabin Chandra Bardoloi | |
---|---|
பிறப்பு | 1875 வடக்கு குவகாத்தி, அசாம் |
இறப்பு | 1936 |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | கர்மபீர் |
கல்வி | கொல்கத்தா பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி |
அறியப்படுவது | இந்திய விடுதலை இயக்கம் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | ஏமந்த குமாரி தேவி |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Amaresh Datta (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo. Sahitya Akademi. p. 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126018038.
- ↑ 2.0 2.1 Anil Kumar (2007). Quit India Movement In Assam. Mittal Publications. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8183242424.
- ↑ 1975 stamps: Nabin Chandra Bardoloi, 3 November 1975
- ↑ 4.0 4.1 Nalini Natarajan; Emmanuel Sampath Nelson (1996). Handbook of Twentieth-Century Literatures of India. Greenwood Publishing Group. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313287783.