நமாமி பிரம்மபுத்ரா
நமாமி பிரம்மபுத்ரா (Namami Brahmaputra) என்பது பிரம்மபுத்ரா நதியின் அழகைக் கொண்டாடும் ஒரு பன்னாட்டு விழாவாகும். அசாம் அரசாங்கம் இவ்விழாவை நடத்துகிறது.[1] அசாம் மாநிலத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு நதி விழா நமாமி பிரம்மபுத்ரா விழாவாகும்.[2] 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை இவ்விழா நடைபெற்றது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ச்சி நமாமி பிரம்மபுத்ரா விழாவை தொடங்கி வைத்தார்.[3]
நாள் | 31.3.2017 முதல் 04.04.2017 வரை |
---|---|
இடம் | பிரம்மபுத்திரா நதிக்கரையிலுள்ள 21 மாவட்டங்களில் நடைபெறுகிறது. குவகாத்தியில் உள்ள கச்சாமாரி மலைத்தொடர் விழாவுக்கான முக்கிய இடமாகும். |
பிற பெயர்கள் | நமாமி பிரம்மபுத்ரா நமாமி பிரம்மபுத்ரா ஆற்றுத் திருவிழா |
ஏற்பாடு செய்தோர் | அசாம் அரசாங்கம் |
பங்கேற்றோர் | சுற்றுலா பயணிகள் மற்ரும் உள்ளூர் மக்கள் |
இணையதளம் | namamibrahmaputra |
ஐந்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் அசாம் மாநிலத்தின் கலை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சி அசாம் மாநிலம் முழுவதும் பிரம்மபுத்திரா நதிக்கரையில் இருந்த 21 மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது.[4]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Assam sets the stage for its first Brahmaputra-themed, mega cultural festival". http://indiatoday.intoday.in/story/assam-brahmaputra-river-namami-festival-tourism-lifetr/1/881408.html.
- ↑ Borah, Prabalika M.. "Celebrating the river" (in en). The Hindu. http://www.thehindu.com/entertainment/music/celebrating-the-river/article17577045.ece.
- ↑ Delhi (2017-03-30). "President of India to Inaugurate Namami Brahmaputra Festival tomorrow". Business Standard India. http://www.business-standard.com/article/government-press-release/president-of-india-to-inaugurate-namami-brahmaputra-festival-tomorrow-117033000351_1.html.
- ↑ "Namami Brahmaputra event to showcase Assam’s rich art, heritage and culture". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/namami-brahmaputra-event-to-showcase-assams-rich-art-heritage-and-culture/articleshow/57796018.cms.