நமோகார மந்திரம்
நமோகார மந்திரம் | |
---|---|
நமோகார மந்திரம் / நவ்கார மந்திரம் | |
தகவல்கள் | |
சமயம் | சைனம் |
மொழி | பிராகிருதம் |
நமோகார மந்திரம் அல்லது நவ்கார மந்திரம் என்பது சைன சமயத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க மந்திரமும் தொடர்ந்து பயன்பாட்டிலிருந்து வரும் மிகப் பழமையான மந்திரமும் ஆகும்.[1][2] இதுவே சைனர்கள் தியானம் செய்யும்போது கூறும் முதல் வழிபாடு ஆகும்.இம் மந்திரம், பஞ்ச நமசுகார மந்திரம், நமசுகார மந்திரம், நவகார மந்திரம் அல்லது பரமேட்டி மந்திரம் எனப் பலவாறு கூறப்படுகிறது.
நமோகார மந்திரத்தின் வரிக்கு வரியான பொருள் கீழே தரப்பட்டுள்ளது. இதன் மூலம், வழிபாட்டாளரொருவர் முதலில் ஐந்து உயர்ந்த உயிர்கள் அல்லது பஞ்சப் பரமேட்டிகளை வணங்குவார்.
- அருகர்— நான்கு கொடிய கர்மாக்களை அழித்தோர்
- சித்தர் — "சித்தி"யை அடைந்தோர்
- ஆச்சாரியர் — ஒருவர் எவ்வாறு வாழவேண்டும் அல்லது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் (ஆசாரிய - ஆசாரணைப் பயில்விப்போர்)
- உபாத்தியாயர் — புகுமுகத் துறவிகளைப் பயில்விப்பவர்[3]
- சாது — சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகின்ற துறவிகளும் முனிவர்களும்
- மேலும், இவ்வைந்து உயர்ந்த உயிர்களையும் வணங்குவதனால்,
- தனது எல்லாக் கர்மாக்களும் அழிக்கப்பட்டு,
- அனைத்து உயிர்களும் நல்வாழ்வு பெற்றிட வேண்டும் எனவும்,
- இம் மந்திரம் மிகவும் புனிதமானது எனவும் இவ் வழிபாட்டாளர் கூறுவார்.
இங்கு எந்தவொரு குறிப்பிட்ட கடவுள்களினதோ அல்லது நபர்களினதோ பெயர்கள் இடம்பெற மாட்டாது. இவ் வழிபாடு கடவுள்கள், ஆசிரியர்கள் அல்லது புனிதர்களது குணங்கள் (நல்லியல்புகள்) குறித்த வேண்டுதலாகவே அமையும். சைனர்கள், தீர்த்தங்கரர்களிடமோ அல்லது துறவிகளிடமோ எந்தவொரு பொருள்சார்ந்த வேண்டுதல்களையோ விருப்பங்களையோ எதிர்பார்ப்பதில்லை. இம் மந்திரத்தைக் கூறுவதன் மூலம், ஆன்மீக வழியில் முன்னேறிய நபர்களுக்கு உயரிய மரியாதையைச் செலுத்துவதும், மக்களுக்கு அவர்தம் இறுதிக் குறிக்கோளாக இருக்கவேண்டிய மோக்சத்தை (விடுதலை) அடைதலை வலியுறுத்துதலுமே சைனர்களின் நோக்கமாகும்.[4] நவ்கார மந்திரத்தில் 68 எழுத்துக்கள் உண்டு.
வரலாறு
தொகுகி.மு 162ம் ஆண்டுக்குரிய அத்திக்கும்பா கல்வெட்டு நமோகார மந்திரத்துடன் துவங்குகிறது. இது சமண மன்னனான காரவேலனால் பொறிக்கப்பட்டது.[5][6]
நமோகார/நவகார மந்திரம்
தொகு'பிராகிருதம் | ஒலிப்பெயர்ப்பு | பொருள் |
---|---|---|
णमो अरिहंताणं | நமோ அரிகதானம் | அருகரை வணங்குகிறேன். |
णमो सिद्धाणं | நமோ சித்தானம் | சித்தர்களை வணங்குகிறேன். |
णमो आयरियाणं | நமோ அயாரியானம் | ஆசாரியர்களை வணங்குகிறேன். |
णमो उवज्झायाणं | நமோ உவாசயானம் | உபாத்தியாயர்களை வணங்குகிறேன். |
णमो लोए सव्व साहूणं | நமோ லோ சவ்வ சாகூனாம் | உலகிலுள்ள அனைத்து முனிவர்களையும் வணங்குகிறேன். |
एसो पंच णमोक्कारो, सव्व पावप्पणासणो | ஏசோபஞ்சநமோக்காரோ, சவ்வபாவப்பணாசணோĒsōpan̄caṇamōkkārō, savvapāvappaṇāsaṇō | இந்த ஐவகை வணக்கம் அனைத்துப் பாவங்களையும் முழுமையாக அழிக்கும். |
मंगला णं च सव्वेसिं, पढमं हवई मंगलं | மங்கல ணாம் ச சவ்வேசிங், பதமம ஆவய் மங்கலம் | மேலும், அனைத்து உயர்ந்த மந்திரங்களுள்ளும் மிகச்சிறந்த மந்திரம் இதுவேயாகும். |
சுருக்கம்
தொகுநமோகார மந்திரம் சைன இலக்கியங்களில், ஓம் நம சித்தானம் (6 அசைகள்), ஓம் ந்கி (2 அசைகள்), அல்லது வெறுமனே ஓம் (1 அசை) ஆகக் குறுக்கப்பட்டிருக்கும்.[7]
தியானம்
தொகுதலையாய சமண நூல்களில் ஒன்றாகிய, திரவிய சங்கிரகத்தின் படி:
ஐந்து உயரிய உயிர்களின் (பஞ்ச-பரமேட்டி) பண்புகளைப் போற்றியவாறு, முப்பத்தைந்து, பதினாறு, ஆறு, ஐந்து, நான்கு, இரண்டு மற்றும் ஓரெழுத்துக்களாலான புனித மந்திரங்களைத் தியானிக்குக, ஓதுக அல்லது உச்சரிக்குக. மேலும், ஆசிரியனின் (குரு) கற்பித்தலுக்கிணங்க ஏனைய மந்திரங்களைத் தியானிக்குக மற்றும் ஓதுக.[8]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Voorst 2015, ப. 107.
- ↑ Jaina, Ravīndrakumāra and Kusuma Jaina (1993). A Scientific Treatise on Great Namokar Mantra. Delhi: Arihant International, Keladevi Sumatiprasad Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7277-029-4.
- ↑ Jain 1917, ப. 61.
- ↑ Shah, Natubhai (1998). Jainism: The World of Conquerors. Sussex Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-898723-31-1.
- ↑ Rapson, "Catalogue of the Indian coins of the British Museum. Andhras etc...", p XVII.
- ↑ Full text of the Hathigumpha Inscription in English பரணிடப்பட்டது 17 நவம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம்
- ↑ von Glasenapp 1999, ப. 410-411.
- ↑ Jain 2013, ப. 173.
மூலங்கள்
தொகு- Voorst, Robert E. Van (2015), RELG: World (Second ed.), Cengage Learning, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-285-43468-1
- Jain, Vijay K. (2013), Ācārya Nemichandra's Dravyasaṃgraha, Vikalp Printers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190363952,
Non-copyright
- Jain, Champat Rai (1917), The Ratna Karanda Sravakachara, The Central Jaina Publishing House