நம்மின பந்து (1960 தெலுங்குத் திரைப்படம்)

நம்மின பந்து (Nammina Bantu) அதுர்த்தி சுப்பாராவ் இயக்கத்தில், 1960 ஆண்டு வெளிவந்த இந்தியத் தெலுங்குத் திரைப்படமாகும். அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். யர்லகட்ட வெங்கண்ணா சௌத்திரி தயாரிப்பில், எஸ். ராஜேஸ்வர ராவ் மற்றும் மாஸ்டர் வேணு இசை அமைப்பில், 7 ஜனவரி 1960 ஆம் தேதி வெளிவந்தது. இப்படம் தமிழில் பாட்டாளியின் வெற்றி என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதை இப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

நடிகர்கள்

தொகு

அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்ரி, எஸ். வி. ரங்கா ராவ், கும்மடி, ரேலங்கி, சடலவட, ஹேமலதா, கிரிஜா, இ. வி. சரோஜா.

கதைச்சுருக்கம்

தொகு

எஜமானர் புஜங்கராவ் (கும்மடி), மாந்தோப்பில் நன்கு சாகுபடி செய்தால் விளைநிலம் தருவதாக வாக்களித்து சந்திரைய்யாவை (எஸ்.வி.ரங்காராவ்) வேலைக்கு அமர்த்துகிறார். வேலை முடிந்த உடன், விளைநிலத்திற்கு பதிலாக தரிசு நிலம் ஒன்றை தருகிறார் புஜங்கராவ். மாட்டுவண்டி போட்டியில், புஜங்கராவ்வின் மாடுகளை ஒட்டிய பிரசாத்தை (அக்கினேனி நாகேஸ்வர ராவ்) வெல்கிறாள் சந்திரைய்யாவின் மகள் லட்சுமி (சாவித்ரி). அந்த போட்டியில் வென்ற பணத்தை வைத்து கிணறு வெட்டுகிறார்கள். அது பிடிக்காத புஜங்கராவ், போட்டியில் வென்ற இரு மாடுகளுக்கும் (ராமுடு மற்றும் லட்சுமணடு) நஞ்சு வைக்க பிரசாத்தை ஏவுகிறார். நஞ்சு வைக்கும் வேலையை செய்ய மறுத்து, சந்திரைய்யாவுடன் இணைந்து, தரிசு நிலத்தில் உதவுகிறான் பிரசாத். புஜங்கராவ்வின் மகளும் உறவினர்களும் சந்திரைய்யாவிற்கு துணையாக நின்றனர். ஆனாலும் சந்திரைய்யாவை வீழ்த்த பல திட்டங்கள் வகுத்தார் புஜங்கராவ். இறுதியில், புஜங்கராவ்விற்கு வெற்றி கிட்டியதா என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

தொகு

எஸ். ராஜேஸ்வர ராவ் மற்றும் மாஸ்டர் வேணு இசை அமைத்தனர். கோசராஜு பாடல் வரிகளை எழுதினார்.

விருதுகள்

தொகு
  • 1959: சிறந்த தெலுங்கு படத்திற்கான குடியரசு தலைவரின் வெள்ளிப் பதக்கம்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "http://www.idlebrain.com/news/2000march20/profile-gummadi.html". {{cite web}}: External link in |title= (help)
  2. 2.0 2.1 "http://dff.nic.in/2011/7th_nff.pdf" (PDF). {{cite web}}: External link in |title= (help)
  3. "http://www.thehindu.com/features/friday-review/namminabantu-1960/article7945135.ece". {{cite web}}: External link in |title= (help)

வெளி-இணைப்புகள்

தொகு