நயப் அலி
நயப் அலி (Nayyab Ali) ஒரு பாக்கித்தான் மனித உரிமை பாதுகாவலர், திருநங்கை ஆர்வலர் மற்றும் சமூக விஞ்ஞானி, பாலின சமத்துவம், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் பத்து வருட அனுபவம் கொண்டவர். ஒரு சுயாதீன ஆலோசகராக, இவர் 2020 ஆம் ஆண்டில், திருநங்கைகளின் உரிமைகளை ஆதரித்ததற்காக ஐ.நா. மனித உரிமைகளுக்கான பிராங்கோ-ஜெர்மன் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 2018 பாக்கித்தான் தேர்தலில் போட்டியிட்ட முதல் சில திருநங்கைகளில் ஒருவரானார். [1] [2] காலா விருதுகளைப் பெற்ற முதல் பாக்கித்தானியர் இவர் எனும் பெருமை பெற்றார். [3] இவர் பாக்கித்தானின் EVAW/G கூட்டணி இணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை ஆவார். பெண், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) திருநங்கைகள் உரிமை ஆர்வலர் நயப் அலிக்கு, பாக்கித்தான் சர்வதேச விருது வழங்கப்படுவதாக அறிவித்தது. திருநங்கைகளுக்கான வழக்கறிஞராக செயல்படுவதற்காக இந்த விருது வழங்கப்பட்டது [1]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅலி பஞ்சாப் மாவட்டத்தின் ஒகாரா நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் முஹம்மது அர்ஸ்லான் . [4] இவர் எட்டாம் வகுப்பில் இருந்தபோது, 13 வயதிலேயே இவள் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. [5] பின்னர் இவர் தனது பாட்டி வீட்டிற்கு சென்று அங்கு தனது கல்வியை தொடர்ந்தார். நயப் தனது 17 வயதில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக வேலை செய்யத் தொடங்கினார்.. [6] இவர் அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு, மாணவராக இருந்த காலத்தில் துன்புறுத்தப்பட்டாள். [7]
கல்வி
தொகுநையாப் தனது நாட்டில் படித்த சில திருநங்கைகளில் ஒருவராகத் திகழ்கிறார் [8] இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார், பின்னர் இஸ்லாமாபாத்தின் பிரஸ்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். [9] [10]
தொழில்
தொகுகற்பித்தல்
தொகுநய்யாப் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முன்பு ஆசிரியராக இருந்தார். [11] இவர் UNDP இல் திருநங்கைகள் உரிமைகள் நிபுணர் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார், நயப் அலி பாக்கித்தானின் மிக முக்கியமான திருநங்கைகளில் ஒருவராகப் பரவலாக அறியப்படுகிரார். இவர் ஒரு ஆர்வலர், கல்வியாளர் மற்றும் #UNDPinPakistan இன் முதன்மை பயிற்சியாளர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். பல தனிப்பட்ட துயரங்களை அனுபவித்த போதிலும், இவர் தனது வாழ்க்கையை சமூக செயல்பாட்டிற்காகவும், திருநங்கை சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்காகவும் அர்ப்பணித்தார்.
சமூக செயற்பாடு
தொகுநயாப் சிறு வயதிலிருந்தே திருநங்கைகளின் உரிமைகளை ஆதரித்து வருகிறார். [12] இவள் பாக்கிஸ்தான் உள்ள திருநங்கை சமூக நலனுக்காக பணியாற்றியுள்ளார் .இவர் அனைத்து பாக்கித்தான் திருநங்கைகள் தேர்தல் வலையமைப்பின் (APTEN) தலைவராக பணியாற்றியுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக, நயாப் தனது சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்தவும் மற்றும் இவர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பெறவும் அரசு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகிறார் [13] பாக்கித்தானில் தனது நிறுவனத்தை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (SECP) பதிவு செய்த முதல் திருநங்கை இவர் ஆவார்.
அரசியல்
தொகு2018 இல் ஒரு வரலாற்று மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு , திருநங்கைகளுக்கு சட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டு, வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்தலில் நிற்கும் உரிமையை வழங்கியது. [14] [15] நயப், 12 பிற திருநங்கைகள் வேட்பாளர்களுடன் இணைந்து 2018 பாக்கித்தான் தேர்தலில் போட்டியிட்ட முதல் சமூகமாக மாறினர். [16] [17] 2018 தேர்தலில் ஒகாராவில் தேசிய சட்டமன்றத் தொகுதியான NA-142 க்காக இவர் போட்டியிட்டார் [18] [19] மொத்தம் 1197 வாக்குகளைப் பெற முடிந்தது, இது இவரது பல பெண் சகாக்களை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார். [20] [21]
நயாப் பாக்கித்தானின் தேர்தல் ஆணையத்தின் மாகாண வாக்காளர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். [22] மேலும் பஞ்சாபில் உள்ள அனைத்து பாக்கித்தான் திருநங்கைகள் தேர்தல் வலையமைப்பின் அங்கமாகவும் திகழ்கிறார்.
சான்றுகள்
தொகு- ↑ "Okara: Transgender candidate Nayab Ali casts vote". DAWN.COM (in ஆங்கிலம்). 2018-07-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ "13 transgenders to contest Pak elections". 2018-06-14. https://www.business-standard.com/article/news-ani/13-transgenders-to-contest-pak-elections-118061400107_1.html.
- ↑ "Trans Woman Nayab Ali Archives". Newsone Urdu (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-12-09. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ "Transgender activist Nayyab Ali to contest Pakistan national election". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-05-06. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ "The transgender acid attack survivor running for parliament" (in en-GB). 2018-07-19. https://www.bbc.com/news/world-asia-44684714.
- ↑ "First time: Transgender set to contest NA polls from Okara". The Express Tribune (in ஆங்கிலம்). 2018-05-04. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ "Transgender from Pakistan nominated for global award". MM News TV (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ Daur, Naya (2020-01-25). "Transgender Woman From Pakistan Nominated For International Award". Naya Daur (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-12-11. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ TNN, Correspondent (2020-02-12). "Nayab Ali becomes first Pakistani transgender person to win Gala Award | TNN". TNN | Tribal News Network (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ Bilal, Amir (2020-01-23). "'Nayab Ali' First Pakistani Transgender Nominated for GALAS Awards Dublin 2020". THE TRANSPRESS (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ "The third gender candidates in the race". www.geo.tv (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ "Transgender person killed in Peshawar". The Nation (in ஆங்கிலம்). 2020-09-10. Archived from the original on 2020-12-09. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ "Nayab Ali- First Pakistani transgender nominated for GALAS awards". Dialogue Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ "Transgender community hails KP's Govt initiative?". BaaghiTV English (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-22. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ "Pakistan: 13 transgenders to contest July 25 elections". The Indian Express (in ஆங்கிலம்). 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ "Exclusive Interview with Pakistani Transgender Nayab Ali". Tv News (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-12-09. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ "4 trans persons to contest elections on PTI-Gulalai's tickets". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ "13 transgenders to contest Pak elections". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ "Pakistan's 13 transgender candidates face threats of violence | SAMAA". Samaa TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ "Transgender candidate from KP gets 536 votes". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ "13 transgenders to contest July 25 elections in Pakistan". WION (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
- ↑ "Transgender to contest elections from Okara for the first time". Daily Pakistan Global (in ஆங்கிலம்). 2018-05-05. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.