நரசராபேட்டை
நரசராபேட்டை (Narasaraopet) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் ஓர் நகராட்சியாகவும், நரசராபேட்டை வட்டத்தின் தலைமையகமாகவும் மற்றும் நரசராபேட்டை வருவாய் பிரிவின் தலைமையகமாகவும் இருக்கிறது. மேலும், இந்த நகரம் கூடுதல் மாவட்ட நீதிபதியின் நீதிமன்றத்தின் இடமாகும். [1] [2]
சொற்பிறப்பு
தொகுஇந்த கிராமத்தின் அசல் பெயர் அட்லுரு என்பதாகும். நரசரோபேட்டை என்ற பெயர் இராஜா மல்லராஜு நரசாராவ், என்ற உள்ளூர் ஜமீன்தாரிடமிருந்து வந்துள்ளது. அவர் அருகிலுள்ள பெரும்பாலான பகுதிகளை வைத்திருந்தார். [3]
நிலவியல் மற்றும் காலநிலை
தொகுகுண்டூர் மாவட்டத்தின் முக்கிய வணிக வர்த்தக மையமாக நரசராபேட்டை உள்ளது. நராசராபேட்டடை மலைகளால் சூழப்பட்ட தட்டையான நிலத்தில் அமைந்துள்ளாது. அவை கிழக்குத் தொடர்ச்சி மலையின் சிவப்பு பாறை மண்ணைக் கொண்டுள்ளது. கோடை மாதங்கள் 45 ° C வரை வெப்பமாக இருக்கும், குளிர்காலம் 27 ° C ஒட்டியிருக்கும்.
குறிப்புகள்
தொகு- ↑ "Guntur District Mandals" (PDF). Census of India. pp. 76, 109. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
- ↑ "District Census Handbook – Guntur" (PDF). Census of India. p. 14,46. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ A Manual of the Kistna District in the presidency of Madras, Gordon MacKenzie