நரசுஸ் சாரதி பொறியியல் கல்லூரி
நரசுஸ் சாரதி பொறியியல் கல்லூரி (narasu's sarathy engineering college) என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி ஸ்ரீமதி மகாலட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையால் 2008 சனவரி 26 ஆண்டு துவக்கப்பட்டது. இதை நிறுவியவர் நரசூஸ் காபியின் உரிமையாளரான சாரதி ஆவார். இது அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் முதுநிலை மற்றும் இளநிலைப் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2011 |
தலைவர் | நிதிஸ் ஹரிஹரர் |
அமைவிடம் | பூசாரிப்பட்டி , , |
சேர்ப்பு | அண்ணா பல்கலைகழகம் |
இணையதளம் | http://www.nsit.edu.in/ |
அமைவிடம்
தொகுநரசுஸ் சாரதி பொறியியில் கல்லூரியானது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், பூசாரிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை 7ஐ ஒட்டி உள்ளது.
படிப்புகள்
தொகுஇளநிலை படிப்புகள்
- பி.இ. (குடிசார் பொறியியல்)
- பி.இ. (கணினி அறிவியல் & பொறியியல்)
- பி.இ. (இலத்திரனியல், தொலைத்தொடர்புப் பொறியியல்)
- பி.இ. (மின் மற்றும் மின்னணுப் பொறியியல்)
- பி.இ. (இயந்திரப் பொறியியல்)
- பி.டெக். (தகவல் தொழில்நுட்டபம்)
முதுநிலைப் படிப்புகள்
- எம்.இ. (கணினி அறிவியல் & பொறியியல்)
- எம்.இ. (விஎல்எஸ்ஐ டிசைன்)