நரதேவன்

சபடலக்ச நாட்டின் ஆஅட்சியாளர்

நரதேவன் (Naradeva) (ஆட்சி சுமார் 709-721 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.

நரதேவன்
ஆட்சியாளர்
சகமான அரசன்
ஆட்சிக்காலம்சுமார் 709-721 பொ.ச.
முன்னையவர்சமந்தராஜா
பின்னையவர்முதலாம் அஜயராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

"பிரபந்த் கோசம்" என்ற நூலில் சமந்தராஜனின் வாரிசாக நரதேவன் குறிப்பிடப்பட்டுள்ளார். சமந்தராஜனின் முன்னோடியான வாசுதேவரின் வாரிசாக புர்தான பிரபந்த சங்கிரஹா என்ற நூல் இவரைப் பெயரிடுகிறது. ஹம்மிர மகாகாவ்யம் மற்றும் சுர்ஜனா-சரிதம் போன்ற பிற நூல்களிலும் நரதேவனைப் பற்றிய ஒரு குறிப்புக் காணப்பகிறது. பிருத்விராஜ விஜயம் இவரைக் குறிப்பிடவில்லை, ஏனெனில் இவரது ஆட்சி குறுகியதாகவும் முக்கியமற்றதாகவும் இருந்திருக்கலாம். [1]

பிஜோலியா பாறைக் கல்வெட்டு "நிர்பா" (ஆட்சியாளர்) பூர்ணதல்லாவை சமந்தராஜனின் மகன் எனவும் வாரிசாகவும் குறிப்பிடுகிறது. டிஆர் பண்டார்கர் போன்ற சில அறிஞர்கள் பூர்ணதல்லாவை நாரதேவனின் மற்றொரு பெயராக விளக்கினர். தசரத சர்மா மற்றும் ஜி.எச்.ஓஜா போன்ற மற்றவர்கள், பூர்ணதல்லாவை நரதேவன் ஆட்சி செய்த இடத்தின் பெயராக இருக்கலாம் என விளக்கம் அளித்தார். [2] ஜே.என். அசோபாவின் கூற்றுப்படி, இந்த இடத்தை மெர்டாவிற்கு அருகில் உள்ள பண்ட்லோட்டா அல்லது பண்ட்லாவுடன் அடையாளம் காணலாம். [3]

நரதேவனுக்குப் பின் இவரது சகோதரன் முதலாம் அஜயராஜா ஆட்சிக்கு வந்தார் . [4]

சான்றுகள் தொகு

உசாத்துணை தொகு

  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • Jai Narayan Asopa (1976). Origin of the Rajputs. Bharatiya. இணையக் கணினி நூலக மைய எண் 2875759.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரதேவன்&oldid=3428465" இலிருந்து மீள்விக்கப்பட்டது