நரம்பு சிலந்தி நோய்

டிராகுன்குலியாசிஸ் (Dracunculiasis), நோய்க்கு இன்னொரு பெயர் நரம்பு சிலந்தி நோய் (guinea worm disease-GWD). இது நரம்பு சிலந்தியால் ஏற்படும் ஒரு தொற்று.[1] நரம்பு சிலந்தி வளர்புழு தொற்றுடைய நீர் வாழும் தெள்ளு பூச்சியுள்ள தண்ணீரைப் பருகும் நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று வருகிறது.[1] ஆரம்பத்தில் நோய் அறிகுறிகள் ஏதும் தெரிவதில்லை .[2] சுமார் ஒரு வருடம் கழித்து, நோய்வாய்பட்டவருக்கு எரிச்சலுடன் கூடிய ஒரு வலி ஏற்படுகிறது. பொதுவாகப் பெண் புழுக்களால் காலின் கீழ் பகுதி சருமத்தில் கொப்பளங்கள் தோன்றுகிறது.[1] சில வாரங்கள் கழித்து அந்த புழு சருமம் வழியாக வெளியேறுகிறது[3] இந்த காலகட்டத்தில் நடப்பதோ, வேலை பார்ப்பதோ சிரமமாக இருக்கும் .[2] இந்த நோய் காரணமாக இறக்க நேரிடுவது சாதாரணமாக நிகழ்வதில்லை..[1]

நரம்பு சிலந்தி நோய் (EN: Dracunculiasis)
நரம்புச் சிலந்தி நோயால் பாதிக்கப்பட்ட மனிதனின் காலிலிருந்து தீக்குச்சியால் புழு நீக்கப்படுகிறது.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases, குடற்புழுவியல், tropical medicine
ஐ.சி.டி.-10B72.
ஐ.சி.டி.-9125.7
நோய்களின் தரவுத்தளம்3945
ஈமெடிசின்ped/616
பேசியண்ட் ஐ.இநரம்பு சிலந்தி நோய்
ம.பா.தD004320

காரணம்

தொகு

மனிதர்களைத் தவிர வேறு எந்த விலங்கினத்தையும் இந்த புழு நோய் தாக்குவதில்லை .[2] இந்த புழுக்கள் சுமார் 2 மில்லிமீட்டர் அகலம் இருக்கும். முதிர்ந்த பெண் புழுக்கள் 60 லிருந்து 100 மில்லிமீட்டர் நீளத்திலும் இருக்கும். (ஆண் புழுக்கள் மிகவும் நீளம் குறைந்தவையாக இருக்கும்.) மனித உடலுக்கு வெளியே இதன் முட்டைகள் 3 வார காலம் உயிரோடிருக்கும் .[1][2] .[4] அதற்கு முன்பாகவே நீர் வாழும் தெள்ளு பூச்சிகளால் அவை உண்ணப்படவேண்டும். [1] நீர் வாழும் தெள்ளு பூச்சிகளுக்குள் இந்த வளர்புழுக்கள் நான்கு மாதங்கள் வரை உயிரோடிருக்கும். [4] இவ்வாறு இந்த நோய் ஒரு பகுதியிலுள்ள மனிதர்களிடம் பரவ ஒவ்வொரு ஆண்டும் சில காலம் அந்தப் பகுதியில் தங்கியிருக்க வேண்டும். [5] பொதுவாக இந்த நோய்த்தொற்று, அறிகுறிகளை வைத்து கண்டறியப்படுகிறது..[6]

தடுப்பு மற்றும் சிகிச்சை

தொகு

ஆரம்பகால நோய்கண்டறிதல் மூலம் இந்த நோயைத் தடுக்கலாம். மேலும் நோய் தொற்றுள்ளவர் அவரது காயம் அல்லது புண் குடிநீரை மாசுபடுத்தாமல் பார்த்து கொள்ளவேண்டும்.[1]

பிற முயற்சிகள் பின்வருமாறு:

சுத்தமான நீரைப் பெறுவதற்கான வழிமுறைகளை மேம்படுத்தவேண்டும், இல்லையெனில் நீர் சுத்தமாக இல்லாத பட்சத்தில் நீரை வடிகட்டவேண்டும். [1] பெரும்பாலும் துணியால் வடிகட்டுவதே போதுமானது.[3]
அசுத்தமான குடிநீரிலுள்ள வளர்புழுக்களைக் கொல்ல டெமிபோஸ்என்ற வேதிபொருளைப் பயன்படுத்தி அந்த நீரை நன்னீராக்கலாம். [1]

இந்த நோய்க்கு மருந்தோ தடுப்பூசியோ கிடையாது.[1] இந்த புழுக்களை மெதுவாக ஒரு குச்சியை அதன் மீது உருட்டி ஒரு சில வாரங்களில் அகற்றலாம்.[2] வளர்ந்து வரும் புழுக்களால் ஏற்படும் புண்களில் நுண்ணுயிரி தொற்று ஏற்படும்.[2] புழுக்களை அகற்றிய பிறகும் கூட வலி சில மாதங்களுக்கு தொடரலாம்.[2]

நோய்ப்பரவு இயல் மற்றும் வரலாறு

தொகு

2013 ஆம் ஆண்டு இந்த நோய் 148 நபர்களைத் தாக்கியதாக அறிவிக்கப்பட்டது.[1] 1986 இல் ஏற்பட்ட பாதிப்புக்களை விட இது பத்து லட்சம் குறைவு.[2] ஆப்ரிக்காவில் 4 நாடுகளில் மட்டுமே இந்த நோய் உள்ளது. 1980 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தை விட இது 20 நாடுகள் குறைவாகக் கொண்டுள்ளது[1] அதிகமாகப் பாதிப்புள்ள நாடு தெற்கு சூடான்.[1] இது முதலாவதாக ஒழிக்கபடும் ஒட்டுண்ணி நோய் ஆக இருக்கலாம்.[7]

நரம்புச் சிலந்தி நோய் பண்டைய காலத்தில் இருந்தே அறியப்பட்ட ஒன்று.[2] எகிப்திய மருத்துவ குறிப்பான எபர்ஸ் பாப்பிரசில் இந்நோய் குறித்து கி.மு. 1550 ஆம் ஆண்டே குறிப்பிடபட்டுள்ளது.[8] டிராகுன்குலியாசிஸ் என்ற பெயர் லத்தீன்மொழியில் இருந்து வந்தது "பறவைநாக துயர்", என்று அதற்கு பொருள்.[9] ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் மேற்கு ஆப்ரிக்காவின் கடலோரப் பகுதியான கினி யில் இந்த நோயைக் கண்ட பிறகே நரம்பு சிலந்தி ("guinea worm") என்ற பெயர் வந்தது. [8]

கினி புழுக்கள் போன்ற வேறொரு இனம் பிற விலங்குகளில் இந்த நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. [10] இவை மனிதர்களைப் பாதிப்பதில்லை.[10] இது ஒரு புறக்கணிக்கபட்ட வெப்பமண்டலம் சார்ந்த நோய் என்று வகைப்படுத்தபட்டுள்ளது .[11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 "Dracunculiasis (guinea-worm disease) Fact sheet N°359 (Revised)". World Health Organization. March 2014. பார்க்கப்பட்ட நாள் 18 March 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Greenaway, C (Feb 17, 2004). "Dracunculiasis (guinea worm disease).". CMAJ : Canadian Medical Association journal = journal de l'Association medicale canadienne 170 (4): 495–500. பப்மெட்:14970098. 
  3. 3.0 3.1 Cairncross, S; Tayeh, A; Korkor, AS (Jun 2012). "Why is dracunculiasis eradication taking so long?". Trends in parasitology 28 (6): 225–30. doi:10.1016/j.pt.2012.03.003. பப்மெட்:22520367. 
  4. 4.0 4.1 Junghanss, Jeremy Farrar, Peter J. Hotez, Thomas (2013). Manson's tropical diseases (23rd edition ed.). Oxford: Elsevier/Saunders. p. e62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780702053061. {{cite book}}: |edition= has extra text (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. "Parasites - Dracunculiasis (also known as Guinea Worm Disease) Eradication Program". CDC. November 22, 2013. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  6. Cook, Gordon (2009). Manson's tropical diseases (22nd ed. ed.). [Edinburgh]: Saunders. p. 1506. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781416044703. {{cite book}}: |edition= has extra text (help)
  7. "Guinea Worm Eradication Program". The Carter Center. Carter Center. Archived from the original on 2015-03-11. பார்க்கப்பட்ட நாள் 2011-03-01.
  8. 8.0 8.1 Tropical Medicine Central Resource. "Dracunculiasis". Uniformed Services University of the Health Sciences. Archived from the original on 2015-06-14. பார்க்கப்பட்ட நாள் 2008-07-15.
  9. Barry M (June 2007). "The tail end of guinea worm — global eradication without a drug or a vaccine". N. Engl. J. Med. 356 (25): 2561–4. doi:10.1056/NEJMp078089. பப்மெட்:17582064. http://content.nejm.org/cgi/content/full/356/25/2561. 
  10. 10.0 10.1 Junghanss, Jeremy Farrar, Peter J. Hotez, Thomas (2013). Manson's tropical diseases (23rd edition ed.). Oxford: Elsevier/Saunders. p. 763. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780702053061. {{cite book}}: |edition= has extra text (help)CS1 maint: multiple names: authors list (link)
  11. "Neglected Tropical Diseases". cdc.gov. June 6, 2011. பார்க்கப்பட்ட நாள் 28 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரம்பு_சிலந்தி_நோய்&oldid=3823075" இலிருந்து மீள்விக்கப்பட்டது