நரியும் காக்கையும் (ஈசாப்)

நரி மற்றும் காகம், பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஈசாப் என்ற அடிமை கூறியதாக கருதப்படும் நீதிக் கதைகளில் ஒன்றாகும். இது பெர்ரி குறியீட்டில் 124வது இடத்தில் உள்ளது. ஆரம்பகால இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் ஈசாப் கதைகளின் பதிப்புகள் உள்ளது. மேலும் இந்த நீதிக்கதை ஒரு பண்டைய கிரேக்க குவளையில் கூட சித்தரிக்கப்பட்டுள்ளது.[1] ஒருவரை முகத்திற்கு எதிராக புகழ்ந்து பேசுவதை எச்சரிப்பதற்கு இந்தக் கதை பயன்படுத்தப்படுகிறது. உலகம் முமுவதும் மழலைப் பள்ளிச் சிறுவர்களுக்கு இக்கதை சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

19ம் நூற்றாண்டுக் கவிஞர் மின்டோனின் நீதிக்கதைகள் நூல்

இக்கதையில் ஒரு காகம் பாலாடைக்கட்டி துண்டு (தமிழில் வடை என்று மாற்றப்பட்டுள்ளது) ஒன்றைக் கண்டுபிடித்து, அதை சாப்பிடுவதற்காக ஒரு மரத்தின் கிளைக்குச் சென்று அமர்ந்தது. அதனைக் கண்ட ஒரு நரி, அந்த பாலாடைக் கட்டியை தனக்காக விரும்பி, காக்கையைப் புகழ்ந்து, உனது கரல் வளத்தை கேட்க ஒரு பாட்டைப் பாடுமாறு கேட்கிறது. காக்கையும் பாட, அதன் வாயிலிருந்து கீழே விமுந்த பாலாடைக் கட்டியை நரி தூக்கிக் கொண்டு ஓடுடியது. நரியின் முகஸ்தியால் மயங்கிப் பாடியதால் வாயிலிருந்த பாலாடைக் கட்டியை இழந்த காகம் வருந்தியது.

இந்த நீதிகதைகளின் ஆரம்பகால பதிப்புகள், பண்டைய கிரேக்கம் மற்றும் இலத்தீன் இரண்டிலும், பொது ஆண்டின் 1ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதற்கு முன்பே இந்த நீதிக்கதைகள் நன்கு அறியப்பட்டிருந்ததற்கான சான்று இலத்தீன் கவிஞரான ஹோரேஸின் கவிதைகளில் வருகிறது. அவரது கடிதங்களில் ஸ்கேவா என்ற மால்ட்ரோயிட் ஸ்பான்ஜரைப் பற்றி உரையாற்றிய கவிஞர், "நரியின் முகத்துதிக்கு[2] மயங்காமல் காக்கை மௌனமாக உண்டிருந்தால் காக்கைக்கு உணவு கிடைத்திருக்கும் மற்றும் நரியிடம் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்காது. மேலும் சண்டை மற்றும் பொறாமை ஆகியவை இருந்திருக்காது" என்று அறிவுறுத்தினார்.[3]

இக்கதை பொதுவாக முகத்துதி செய்பவர்களுக்கு எதிரான எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சாதாராணமாக அலுவலகங்களிலும், அரசியலும் முகஸ்துதி மேற்கொள்ளப்படுகிறது.

துரோக முகத்துதியில் மகிழ்ச்சியடைபவன் தவறு இழைக்கிறான் என்ற எச்சரிக்கையுடன் ஃபெட்ரஸ் தனது இலத்தீன் கவிதையை முன்னுரைக்கிறார். அதற்கு வித்தியாசமான விளக்கம் அளிக்கும் சிலரில் ஒருவர் ஓடோ ஆஃப் செரிடோன் ஆவார். இதன் நீதி இலட்சியத்தின் நாட்டத்தில் அறம் மறக்கப்படுகிறது.[4] இக்கதையின் கிரேக்கப் பதிப்பில் காகத்தின் நம்பகத்தன்மையை நரி நகைச்சுவையுடன் முடித்து வைக்கிறது. நரி அதன் திருட்டுக்காக தண்டிக்கப்படாமல் போக அனுமதிப்பதன் மூலம் ஒழுக்கம் புண்படுத்தப்பட்டதாக உணரப்படுகிறது. எனவே கவிஞர் சஸ்காட்செவன் ஒரு பிரபலமான பாடல் வடிவத்தில் இக்கதையின் ஒரு தொடர்ச்சி வழங்கினார். அதில் நரியின் இறுதி ஊர்வலம் வேடிக்கையாக விவரிக்கப்பட்டுள்ளது.

அவர் (நரி) இறந்துவிட்டதால் நான் வருத்தப்படவில்லை, அவர் என் பாலாடைக்கட்டியை எனக்கு பதிலாக சாப்பிட்டார், அவர் விதியால் தண்டிக்கப்பட்டார் - கடவுளே, நீங்கள் என்னைப் பழிவாங்கினீர்கள்.[5]

பௌத்த ஜாதக கதையில் முகஸ்துதியின் கிழக்குக் கதை ஒன்று உள்ளது.[6] இதில் ஒரு குள்ளநரி, ஆப்பிள் மரத்தில் மீதமர்ந்து உண்ணும் காகத்தின் குரலைப் பாராட்டுகிறது. காகம், பிறரும் தனது குரலைப் பாரட்ட வேண்டும் நரியிடம் கூறியது. மேலும் குள்ளநரியுடன் பகிர்ந்து கொள்வதற்காக மரத்தை உலுக்கி சில பழங்களை உதிர்க்க விடுகிறது.[7]

சிந்து சமவெளி நாகரிகத்தின் லோத்தல் என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வர்ணம் பூசப்பட்ட குவளையின் கதையின் சித்தரிப்பு வேறு எந்த ஆதாரத்தையும் விட குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.[8] இந்தக் காட்சியில், பறவை ஒரு மரத்தில் மீனைப் பிடித்துக் கொண்டிருப்பது போலவும், அதன் அடியில் ஒரு நரியைப் போல தோற்றமளிக்கும் விலங்கு போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.[9]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. History of the Graeco-Latin Fable, Francisco Rodríguez Adrados, Leiden 1999, vol 3, p.161, available at Google Books
  2. முகத்துதி
  3. Book 1.17, lines 50-1
  4. The Fables of Odo of Cherington, John C. Jacobs, Syracuse University Press 1985, pp.149-50; there is a limited preview in Google Books
  5. Fontaine, Jean de La; Robinson, Alan J. (1997). Fifty Fables of La Fontaine. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780252066498. பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.
  6. "The Jataka, Vol. II: Book III. Tika-Nipāta: No. 294. Jambu-Khādaka-Jātaka". பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.
  7. "The Jataka, Vol. II: Book III. Tika-Nipāta: No. 294. Jambu-Khādaka-Jātaka". பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.
  8. Ghosh, Amalananda (1989). Encyclopaedia of Indian Archaeology. Vol. 1. New Delhi. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004092641.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  9. R. K. Pruthi, "Indus Civilization: Part 9." Discovery Publishing Pvt.Ltd., p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8171418651

வெளி இணைப்புகள்

தொகு