நரேசு யாதவ் அடேலி

இந்திய அரசியல்வாதி

நரேசு யாதவ் அடேலி (Naresh Yadav Ateli, 1 பெப்ரவரி 1963 – 5 நவம்பர் 2024) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இவர் அரியானா மாநிலத்தில் உள்ள மகேந்திரகர் மாவட்டத்தின் அடேலி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அரியானா யுவ கிசான் சங்கர்சு சமிதியில் தலைவராகவும் இருந்தார்.[2][3]

நரேசு யாதவ்
Naresh Yadav
தொகுதிஅடேலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1963-02-01)1 பெப்ரவரி 1963 [1]
இரட்டா காலன்
இறப்பு5 நவம்பர் 2024(2024-11-05) (அகவை 61)
குருகிராம், அரியானா, இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஒம்கலா யாதவ் (மனைவி) [1]

பின்னணி

தொகு

நரேசு யாதவ் அடேலி அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், அரியானா பிரதேச இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.[4] 2005 ஆம் ஆண்டில் அரியானா சட்டமன்றத்திற்கு ஒரு சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நரேசு யாதவ் 1963 ஆம் ஆண்டு அரியானா மாநிலத்தின் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள அடேலி நங்கல் தாலுகாவில் உள்ள இரட்டா கலன் கிராமத்தில் பிறந்தார். ஆல்வார் மற்றும் இசார் நகரங்களில் முதுகலை அறிவியல் (வேளாண்மை) மற்றும் சட்டம் பாடத்தில் பட்டம் பெற்றார். படிப்பை முடித்தவுடன் ஓம்கலா யாதவ் சிங் என்பவரை மணந்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

வகித்த பதவிகள்

தொகு
  • 2005 ஆம் ஆண்டில் நரேசு யாதவ் அரியானாவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[6]
  • அகில இந்திய காங்கிரசு கட்சி உறுப்பினர்
  • தலைவர், அரியானா யுவ கிசான் சங்கர்சு சமிதி.
  • தலைவர், அகில இந்திய கூட்டாட்சி குடியரசுக் கட்சி
  • உறுப்பினர், ஐக்கிய நாடுகள் சங்கங்களின் இந்திய கூட்டமைப்பு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேசு_யாதவ்_அடேலி&oldid=4156845" இலிருந்து மீள்விக்கப்பட்டது