நரேந்திர நாராயண் பூங்கா
நரேந்திர நாராயண் பூங்கா (Narendra Narayan Park) இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள கூச் பெகர் நகரில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தாவரவியல் பூங்காவாகும். 1892 ஆம் ஆண்டு இப்பூங்கா நிறுவப்பட்டது. இதற்கு முந்தைய கூச் பெகர் மாநிலத்தின் ஆட்சியாளர் சிறீ நரேந்திர நாராயண் பெயர் பூங்காவிற்குச் சூட்டப்பட்டது. மகாராசா நிருபேந்திர நாராயண் என்பவர் இப்பூங்காவை நிறுவி தனது தந்தையின் பெயரை சூட்டினார். ஒரு எக்டேர் நீர்நிலை உட்பட 5.7 எக்டேர் அளவிற்கு நரேந்திர நாராயண் பூங்கா பரப்பளவைக் கொண்டுள்ளது. பொழுதுபோக்கும் தாவரவியல் ஆய்வுகள் இப்பூங்காவின் நோக்கங்களாகும். [1][2][3]
மேற்கு வங்கத்தின் வனத்துறை பராமரித்து வரும் இப்பூங்காவின் வளாகத்தில் பிதன் சந்திர கிருசி விசுவவித்யாலயா என்ற பெயரில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஒன்று உள்ளது. [4] 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பூங்காவின் நிறுவனர் மகாராசா நிருபேந்திர நாராயணனின் சிலை அவரது 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திறக்கப்பட்டது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ A Directory of Botanic Gardens and Parks in India by R. K. Chakraverty, D. P. Mukhopadhyay - 1990 - Page 31
- ↑ Plant Diversity and Conservation in India: An Overview by H. J. Chowdhery, Sri Krishna Murti - 2000 - Page 190
- ↑ Forests Gardens Parks And Urban Environment by D. N. Tiwari 1995 - Page 161
- ↑ Narendra Narayan Park India - Cooch Behar
- ↑ "North Bengal & Sikkim News". The Telegraph, Calcutta. 8 February 2013. http://www.telegraphindia.com/1130208/jsp/siliguri/story_16537075.jsp#.UqlqBex4pr4. பார்த்த நாள்: 12 December 2013.