நர்கீசு பாகேரி
இந்திய நடிகை
நர்கீசு பாகேரி (Nargis Bagheri) என்பவர் ஓர் இந்திய நடிகையும் பாடகியும் ஆவார். இவர் பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் படம் ஒன்றில் பாடலையும் பாடியுள்ளார்.
நர்கீசு பாகேரி | |
---|---|
பிறப்பு | 10 சூன் 1984 புனே, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, பாட்கர் |
செயற்பாட்டுக் காலம் | 2005-2010 |
வாழ்க்கை
தொகுபாகேரி புனே நகரைச் சேர்ந்தவர்.[1][2] கரம் மசாலா இவரது அறிமுகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2005-இல் வெளியிடப்பட்டது.[3][4] இவரது தமிழ்த் திரைப்படமான நினைத்தலே 2007-இல் வெளியிடப்பட்டது.[5] இவரது அடுத்த பாலிவுட் படம் பிரணாலி: தி டிரெடிஷன் 2008-இல் வெளியிடப்பட்டது.[6][7][8] பின்னர், இவரது மார்னிங் வாக் திரைப்படம் 2009-இல் வெளியிடப்பட்டது.[9][10] இந்தப் படத்தில், "நாச் லே" என்ற பாடலையும் பாடினார்.[11] இவரது கடைசி படம் குஸ்தி 2010-இல் வெளியிடப்பட்டது.[12][13]
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2005 | கரம் மசாலா | பூஜா | அறிமுக படம் |
2007 | நினைதலே | ரூபா | தமிழ் படம் |
2008 | பிரணலி: பாரம்பரியம் | பிரணலி | |
2009 | மார்னிங் வாக் | அஞ்சலி | "நாச் லே" பாடலுக்கான பின்னணி |
2010 | குஷ்தி | லாட்லி | கடைசி படம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "THE NAMESAKE". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "Meet the women in Garam Masala". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "Nargis Bagheri believes in slow but steady growth". Deccan Chronicle. 4 July 2009. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "PIX: The GORGEOUS women Akshay launched". Rediff.com. 29 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "Ninaithale suffers from a weak story". Rediff.com. 14 May 2007. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "Pranali - The Tradition Movie Photos | Pranali - The Tradition Movie Stills | Pranali - The Tradition Bollywood Movie Photo Gallery - ETimes Photogallery". photogallery.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-24.
- ↑ "PRANALI: THE TRADITION". Cinestaan. Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "PRANALI - THE TRADITION". Box Office India. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "MORNING WALK". Box Office India. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "Morning Walk Cast & Crew". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "Shaan is all praise for Nargis". The Times of India. 14 July 2009. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "KUSHTI". Box Office India. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "KUSHTI". Cinestaan. Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.