நறும்பூண்
பூண் என்பது மார்புக் கவச அணி. நறும்பூண் என்பது நறுமணப் பூக்களாலான மார்புக் கவசம். பெரும்பூண் என்பது மார்பில் அணியும் பெரிய கவசம்.
பெரும்பூண் சென்னி என்னும் சோழ மன்னனின் படைத்தலைவன் பழையன் என்பவன் போஒர் என்னும் ஊரில் இருந்துகொண்டு சோழநாட்டு எல்லையைக் காத்துவந்தான். நறும்பூண் அத்தி உள்ளிட்ட எழுவர் கூட்டணி ஒன்று பழையனைத் தாக்கிக் கொன்றது. சினம் கொண்ட பெரும்பூண் சென்னி தானே முன்னின்று தாக்கி எழுவர் கூட்டணியை முறியடித்தான். அப்போரின்போது எழுவர் கூட்டணியில் இருந்துகொண்டு தாக்கிய கணையன் என்பவன் மட்டும் பிடிபட்டான்.அவனைச் சோழன் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து கழுமலம் என்னும் ஊரிலிருந்த சிறையில் அடைத்துவைத்தான்.
இந்தப் பெரும்பூண் சென்னி அழும்பில் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட சோழ மன்னன். இவன் தலையில் பூப்பிணையலாலான கவசமும், மார்பில் பெரும்பூண் கவசமும் அணிந்திர்ந்தான். [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ குடவாயில் கீரத்தனார் – அகநானூறு 44