நல்ல தண்ணி தீவு
தமிழ்நாட்டின் ஒரு தீவு
நல்ல தண்ணி தீவு (Nalla Thanni Theevu) என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது தமிழக கடற்கரையில் இருந்து தென்கிழக்கில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள மக்கள் வசிக்காத மூன்று தீவுகளில் ஒன்று ஆகும். பிற இரண்டு தீவுகள் முயல் தீவு, குருசடை தீவு ஆகும்.[1] இந்தத் தீவு இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்டது.
புவியியல் | |
---|---|
ஆள்கூறுகள் | 9°06′24″N 78°34′44″E / 9.10667°N 78.57885°E |
பரப்பளவு | 101.00 km2 (39.00 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 11.9 m (39 ft) |
நிர்வாகம் | |
இந்தியா | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
வட்டம் | கடலாடி வட்டம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ P. S. Ramakrishnan (2002). Traditional ecological knowledge for managing biosphere reserves in South and Central Asia. Oxford & IBH Pub. Co. p. 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120415442, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-204-1544-7.
{{cite book}}
: More than one of|ID=
and|id=
specified (help)