நல உரிமை என்பது ஒருவருக்கு எங்கிருந்தாலும் இருக்கும் அடிப்படை நலத்துக்கான உரிமை ஆகும். இது ஒரு பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமை ஆகும். இந்த உரிமை உலக மனித உரிமைகள் சாற்றுரை, அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை உட்பட்ட பல்வேறு அனைத்துலக உடன்படிக்கைகள் ஊடாக நிலைநாட்டப்பட்டுள்ளது.[1] எனினும் இந்த உரிமையை நிறைவேற்றுவது தொடர்பாக நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் உண்டு.

மேற்கோள்கள் தொகு

  1. "The Right to Health - Factsheet" (PDF). ohchr.org. 2008. பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல_உரிமை&oldid=1984509" இலிருந்து மீள்விக்கப்பட்டது