நளினி காந்தா பட்டசாலி

இந்திய வங்காள வரலாற்றாசிரியர், தொல்லியல் ஆய்வாளர், நாணயவியலாளர், கல்வெட்டு நிபுணர், தொல்பொருள

நளினி காந்தா பட்டசாலி (Nalini Kanta Bhattasali, 24 சனவரி 1888 - 6 பெப்ரவரி 1947) என்பவர் ஒரு இந்திய வங்காள வரலாற்றாசிரியர், தொல்லியல் ஆய்வாளர், நாணயவியலாளர், கல்வெட்டு நிபுணர், தொல்பொருள் வல்லுநர் ஆவார். [1] [2]

நளினி காந்தா பட்டசாலி
பட்டசாலியின் ஒளிப்படம்
பிறப்பு(1888-01-24)24 சனவரி 1888
பிக்ரம்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு6 பெப்ரவரி 1947(1947-02-06) (அகவை 59)
அறியப்படுவதுதாக்கா அருங்காட்சிய முதல் பொறுப்பாளர்

தொழில்

தொகு

பட்டசாலி 1912 இல் முதுகலைப் படிப்பை முடித்தார். பின்னர் கொமிலா விக்டோரியா கல்லூரியில் வரலாற்று ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு பாலூர்காட் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகச் இணைந்தார். 1914 சூலையில், இவர் தாக்கா அருங்காட்சியகத்தில் (பின்னர் வங்கதேச தேசிய அருங்காட்சியகம் ) அதன் பொறுப்பாளராக சேர்ந்தார். 1947 இல் இவர் இறக்கும் வரை அந்த பதவியில் இருந்தார். பண்டைய வங்காளத்தின் வரலாறு மற்றும் காலக்கோடுக்கு முக்கியமான பொருட்களின் பங்களிப்பு குறித்து அறிக்கைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதினார். இவரது ஆய்வுகளில் கிழக்கு வங்காளம் (வங்க-சமதாதா) குறிப்பிடத்தக பகுதியாக இருந்தது.

பட்டசாலி வங்க இலக்கியத்தில் சில படைப்புகளை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளின் தொகுப்பு, "ஹாஷி ஓ அஸ்ரு" 1915 இல் வெளியிடப்பட்டது. மேலும் 1936 இல் கிருத்திவாசி ராமாயணத்தின் தனித்துவமான கையெழுத்துப் பிரதியின் முதல் புத்தகத்தின் பதிப்பு இவரால் வெளியிடப்பட்டது. [3] இவர் தாக்கா பல்கலைக்கழகத்தில் வங்க இலக்கியம், பழங்காலவியல், வரலாறு ஆகியவற்றைக் கற்பித்தார்.

குறிப்புகள்

தொகு
  1. Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
  2. "Bhattasali, Nalini Kanta (1888-1947)". National Library of Australia. பார்க்கப்பட்ட நாள் 12 August 2017.
  3. Nalinikanta Bhattasali (ed.), Ramayana-Adikanda (Dacca: P.C. Lahiri, Secretary, Oriental Texts Publication Committee, University of Dacca, 1936).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினி_காந்தா_பட்டசாலி&oldid=3685559" இலிருந்து மீள்விக்கப்பட்டது