நவகுஞ்சரம்

நவகுஞ்சரம் (Navagunjara) என்பது இந்தியாவின் வீரகாவியமான மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட கற்பனை உயிரினம் ஆகும். இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் பாரம்பரிய ஒவிய பாணியான படா-சித்ரா ஓவியத்தில் சிறப்பாக இடம்பிடித்துள்ளது இந்த உருவம். இந்த உருவம் கண்ணனின் ஒரு மாய வடிவமாகக் கருதப்படுகிறது. இந்த உருவத்தில் அருச்சுனன் முன்னால் கண்ணன் வந்ததாக ஒரிய மொழி மகாபாரதத்தில் வருகிறது.[1] சரளா தாசா என்பவர் ஒரிய மொழியில் எழுதிய மகாபாரதம் இந்த உருவத்தை விவரிக்கிகிறது. வேறு எந்த மொழி மகாபாரதத்திலும் இந்தக் கதை இல்லை. அர்சுணன் ஒரு சமயம் மலை மீது தவம் செய்து போது கண்ணன் அவன் முன் நவகுஞ்சர வடிவில் வருகிறான் இதன் உருவம் எவ்வாறு இருக்கும் என்றால் சேவல் தலையும், யானை, புலி, மான் அல்லது குதிரை ஆகியவற்றின் கால்களுடன் நின்ற நிலையில் நான்காவது காலுக்கு பதில் தாமரை அல்லது ஒரு சக்கரம் ஏந்திய ஒரு மனித கையாகும். இந்த மிருகத்தின் கழுத்து மயில் கழுத்தாகவும்,, காளையின் திமிலொடு, சிங்கத்தின் இடுப்பும் கொண்டும், வால் நாகப்பா்பாகவும் இருந்தது இந்த விசித்திர விலங்கைக் கண்ட அர்சுணன் அதை குறிவைத்து தனது வில்லை எழுப்புகிறான், பிறகு வந்திருப்பது கண்ணனே என உணர்ந்த அர்சுணன் வில்லைக் கீழேபோட்டு வணங்குகிறான்.[2]

நவகுஞ்சாரத்தை வணங்கிய நிலையில் அர்சுணன். பின்னால் புரி ஜகந்நாதரின் உருவம்.

இந்தக் காட்சி புரி ஜகன்னாதர் கோயிலின் வடக்கு பகுதியில் சிற்பமாக உள்ளது.[3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவகுஞ்சரம்&oldid=2039628" இருந்து மீள்விக்கப்பட்டது