நவ்பிரீத் சிங்
இந்திய குண்டு எறியும் வீரர்
நவ்பிரீத் சிங் (Navpreet Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். குண்டு எறிதல் விளையாட்டில் இவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். நவ்பிரீத் சிங் சீமா என்ற பெயராலும் அறியப்பட்டார். 1979 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2004 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு போட்டியில் இவர் எறிந்த 19.93 மீட்டர் தொலைவு என்பது இவரது தனிப்பட்ட சிறந்த எறிதல் ஆகும்.
போட்டி பதிவுகள்
தொகுஆண்டு | போட்டி | இடம் | நிலை | நிகழ்வு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
நாடு இந்தியா | |||||
1997 | ஆசிய இளையோர் வெற்றியாளர் | பேங்காக் | 2ஆவது | குண்டு எறிதல் | 16.16 மீ |
1998 | உலக இளையோர் வெற்றியாளர் | பிரான்சு | 23ஆவது | குண்டு எறிதல் | 15.25 மீ |
2002 | 2002 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் | மன்செஸ்டர் | – | குண்டு எறிதல் | - |
ஆசிய இளையோர் வெற்றியாளர் | கொழும்பு, இலங்கை | 2ஆவது | குண்டு எறிதல் | 18.97 மீ | |
2003 | 2003 ஆப்ரோ-ஆசிய தடகளப் போட்டிகள் | ஐதராபாத்து (இந்தியா) | 3ஆவது | குண்டு எறிதல் | 18.81 மீ |
2005 | 2005 ஆசிய தடகள வெற்றியாளர் | இஞ்சியோன், தென் கொரியா | 2ஆவது | குண்டு எறிதல் | 19.40 மீ |
2005 ஆசிய உள்ளரங்கப் போட்டிகள் | பேங்காக் | முதல் இடம் | குண்டு எறிதல் | 18.80 மீ | |
2006 | 2006 பன்னாட்டு தடகளப் போட்டிகள் | ஏதென்ஸ், கிரேக்கம் (நாடு) | 7ஆவது | குண்டு எறிதல் | 18.43 மீ[1] |
2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | தோகா, கத்தார் | 4ஆவது | குண்டு எறிதல் | 18.99 மீ | |
2007 | 2007 ஆசிய தடகள வெற்றியாளர் | அம்மான், ஜோர்தான் | முதல் இடம் | குண்டு எறிதல் | 19.70 மீ |
உலக தடகள வெற்றியாளர் | ஒசாக்கா | 20 ஆவது | குண்டு எறிதல் | 19.35 மீ |
மேற்கோள்கள்
தொகு- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் நவ்பிரீத் சிங்-இன் குறிப்புப் பக்கம்
- ↑ Representing Asia