நவ்ரே
நவ்ரே (Navreh or Kashmiri New Year) காஷ்மீர இந்துக்களின் புத்தாண்டு நாள் ஆகும். சமசுகிருத மொழியின் நவ வருஷம் (புத்தாண்டு) என்பதே காஷ்மீர மொழியில் நவ்ரே என அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தின் (மார்ச்-ஏப்ரல்) பௌர்ணமி நாளன்று காஷ்மீர புத்தாண்டு நவ்ரே துவங்குகிறது.[1]
நவ்ரே | |
---|---|
கடைபிடிப்போர் | காஷ்மீர இந்துக்கள் |
வகை | சமூகம், பண்பாடு, சமயம் |
முக்கியத்துவம் | காஷ்மீரப் புத்தாண்டு |
கொண்டாட்டங்கள் | புத்தாண்டு விழா |
நாள் | 13 ஏப்ரல் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று, (சந்திரக் கலை) |
நவ்ரே புத்தாண்டு சடங்கு முறைகள்
தொகுநவ்ரே எனும் காஷ்மீரப் புத்தாண்டு அன்று பெரிய தட்டில் உணவு, புதிய மலர்கள், புதிய புல், தயிர், அக்ரூட் போன்ற உலர் பழங்கள், பருப்புகள், எழுது பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், உப்பு, மூலிகை போன்ற பிரசாதம் இறைவனுக்கு படைக்கப்படுகிறது. புத்தாண்டு நாளுக்கு முதல் நாள் இரவில் சமைத்த அரிசி, கோதுமை, ரொட்டி ஆகியவற்றை துணியில் மூடி வைத்திருப்பர். புத்தாண்டு தினத்தன்று, குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி, மூடி வைத்திருந்த உணவு மூட்டையை அவிழ்த்து, புத்தாண்டு நாளான நவ்ரே அன்று அதைப் பார்ப்பார்கள். இது மலையாளிகள் விஷூ புத்தாண்டு பண்டிகை கொண்டாடுவது போன்று உள்ளது.
அரிசி மற்றும் நாணயங்கள் அன்றாட உணவு மற்றும் செல்வத்தைக் குறிக்கின்றன. எழுதுபொருட்கள் கற்றலுக்கான தேடலை நினைவூட்டுகிறது. கண்ணாடி நமது நினைவுகளைப் பின்னோக்கிப் பிரதிபலிக்கிறது. மூலிகை வாழ்க்கையின் கசப்பான அமசங்களை நினைவூட்டுகிறது. உணவைப் பார்த்த பிறகு, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக நீர் நிலைகளில் ஒரு வால்நட் பருப்பை வீசுகிறார்கள். பின்னர் குடும்ப்பத்தினர் கோயிலில் உள்ள அம்மனுக்கு நெய்யில் மஞ்சள் சாதம் படையலிட்டு, வணங்கி வாழ்த்து பெறுகின்றனர்.[2]
இதனைய்ம் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Navreh The New Year Day in Kashmir".
- ↑ Crump, William D. (2014), Encyclopedia of New Year's Holidays Worldwide, MacFarland, page 114-115
மேலும் படிக்க
தொகு- Toshkhani, S.S. (2009). Cultural Heritage of Kashmiri Pandits. Pentagon Press.
- Robert Sewell (15 March 2010). The Indian Calendar – With Tables for the Conversion of Hindu and Muhammadan Into A. D. Dates, and Vice Versa. Read Books Design. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4455-3119-9.