நிலவின் கலை

நிலவின் கலை என்பது புவியில் இருந்து காணக்கூடிய நிலவின் முற்பக்கத்தில் கதிரவ ஒளி பதியும் போது ஏற்படும் வடிவம் ஆகும். ஒவ்வொரு நிலவு மாதத்திற்கு (சுமார் 29.53 நாட்கள்) ஒரு முறை நிலவின் கலைகள் மாறுகின்றன.

வட துருவத்தில் இருந்து காணும்போது நிலவின் கலைகள்
தென் துருவத்தில் இருந்து காணும் போது நிலவின் கலைகள்

நிலவின் சுழற்சியானது புவியின் ஈர்ப்புவிசையால் பூட்டப்பட்டுள்ளது. இதனால் நிலவின் முற்பக்கம் மட்டுமே எப்போதும் புவியை நோக்கி இருக்கின்றது. இப்பக்கத்தின் மீது விழும் கதிரவ ஒளியின் அளவைப் பொறுத்து வானில் வெவ்வேறு வடிவங்களில் நிலவு காட்சியளிக்கும்.[1]

நிலவின் கலைகள் தொகு

நிலவின் கலைகள் அனைத்தையும் மறைமதி, வளர்மதி, முழுமதி மற்றும் தேய்மதி என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். பிறைமதி, அரைமதி மற்றும் குமிழ்மதி ஆகிய சொற்கள் நிலவின் வடிவங்களைக் குறிக்கப் பயன்படுகின்றன.

நிலவின் முதன்மையான எட்டுக் கலைகள்
கலை வட துருவம் தென் துருவம் காணும் நிலை உச்ச நிலை சராசரி நிலவு எழும் நேரம் சராசரி நிலவு வீழ்ச்சி நேரம் வட துருவம் தென் துருவம் புகைப்படம்
(வட துருவத்தில் இருந்து காணும் போது)
மறைமதி 0% புலப்படாது நண்பகல் 6 am 6 pm
 
 
புலப்படாது
வளரும் பிறைமதி வலப்புறம், 1–49% ஒளிர்வட்டம் இடப்புறம்,

1–49% ஒளிர்வட்டம்

காலை முதல் அந்தி சாயும் பின்பு வரை 3 pm 9 am 9 pm
 
 
 
வளரும் அரைமதி வலப்புறம், 50% ஒளிர்வட்டம் இடப்புறம், 50% ஒளிர்வட்டம் மதியம் மற்றும் மாலை 6 pm நண்பகல் நள்ளிரவு
 
 
 
வளரும் குமிழ்மதி வலப்புறம், 51–99% ஒளிர்வட்டம் இடப்புறம், 51–99% ஒளிர்வட்டம் பிற்பகல் மற்றும் இரவின் பெரும்பாலான நேரம் 9 pm 3 pm 3 am
 
 
 
முழுமதி முழுமையான ஒளிர்வட்டம் கதிரவ மறைவு முதல் எழுச்சி வரை நள்ளிரவு 6 pm 6 am
 
 
 
தேயும் குமிழ்மதி இடப்புறம், 99–51% ஒளிர்வட்டம் வலப்புறம், 99–51% ஒளிர்வட்டம் இரவின் பெரும்பாலான நேரம் மற்றும் அதிகாலை 3 am 9 pm 9 am
 
 
 
தேயும் அரைமதி இடப்புறம், 50% ஒளிர்வட்டம் வலப்புறம், 50% ஒளிர்வட்டம் பின்னிரவு மற்றும் காலை 6 am நள்ளிரவு நண்பகல்
 
 
 
தேயும் பிறைமதி இடப்புறம், 49–1% ஒளிர்வு வலப்புறம், 49–1% ஒளிர்வு பொழுது விடியும் முன்பு இருந்து பிற்பகல் வரை 9 am 3 am 3 pm
 
 
 

வளர்தலும் தேய்தலும் தொகு

நிலவும் கதிரவனும் புவியின் ஒரே பக்கத்தில் இணைந்திருக்கும் போது புவியை நோக்கி இருக்கும் நிலவின் பிற்பக்கம் கதிரவ ஒளியின்றி இருளாக இருக்கும். இதுவே மறைமதி என்று அழைக்கப்படுகிறது. பிறகு அந்த ஒளி மெல்ல மெல்ல அதிகரிப்பதால் நிலவு வளர்வது போல் தோன்றும். இதுவே வளர்மதி என்று அழைக்கப்படுகிறது. பிறகு அந்த ஒளி முழுமையாக பதியும் போது நிலவு வட்ட வடிவாகத் தெரியும். இதுவே முழுமதி என்று அழைக்கப்படுகிறது. பிறகு அந்த ஒளி மெல்ல மெல்ல குறைவதால் நிலவு தேய்வது போல் தோன்றும். இதுவே தேய்மதி என்று அழைக்கப்படுகிறது. பிறகு ஒளி முற்றிலும் குறைந்து மீண்டும் புதுநிலவு வரும்.

மேற்கோள்கள் தொகு

  1. "நிலவின் கலைகள் (ஆங்கிலத்தில்)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவின்_கலை&oldid=3601166" இலிருந்து மீள்விக்கப்பட்டது