நாகனார் என்பவர் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். நல்லந்துவனார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு [1] இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். அப்பாடலை இவர் பாலையாழ் என்னும் பண் கூட்டிப் பாடிவந்தார். வையை ஆற்றில் மக்கள் நீராடிய முறைமையை இந்தப் பாடல் விரித்துரைக்கிறது.

இசை கூட்டும் இன்ப அடிகள் சில
'வரையன புன்னாகமும்,
கரையன சுரபுன்னையும்,
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
மனைமாமரம் வாள்வீரம்,
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,
தாய தோன்றி தீயென மலரா,
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்
பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்
வயவர் அரி மலர்த் துறை என்கோ? (அடிகள் 16 முதல் 25)

இவற்றில் மரவகைகளின் இயல்பும், இருப்பிடங்களும் வேறுபடுத்தித் தெளிவாக்கப்பட்டுள்ளமை தனிச் சிறப்பாகும்.

அடிக்குறிப்பு

தொகு
  1. பரிபாடல் 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகனார்&oldid=1635687" இலிருந்து மீள்விக்கப்பட்டது