நாக பந்தம் என்பது ஓவியப்பா வகைகளில் ஒன்று. ஓவியப் பாவினைச் சித்திரக்கவி என்பர். நாகப்பிணை என இதனைத் தனித்தமிழ்ச் சொற்களால் குறிப்பிடலாம். 2, 4, 8 என நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும். பாடல் ஒன்றின் எழுத்துக்கள் நாகங்களின் தலையிலிருந்து வால் வரையில் உள்ள கட்டங்களில் எழுதப்பட்டிருக்கும். எந்த நாகத்தின் தலையிலிருந்து படித்தாலும் அதே பாடல் வரும்படி பாடலின் அமைப்பு இருக்கும். சொல்வளம் மிக்கவர் இதனைப் பாடுவார்.

  • ஒற்றைநாக பந்தம் (ஒரு நாகம் 2, 3, 4 இடங்களில் இணைப்பு வரும்படி வரையப்பட்ட படத்தில் அமையும் பாடல்)
  • இரட்டைநாக பந்தம்
  • முந்நாக மந்தம்
  • நானாக பந்தம்
  • எண்ணாக பந்தம் (அட்டநாக பந்தம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகபந்தம்&oldid=3418511" இலிருந்து மீள்விக்கப்பட்டது