நாகப் பிரதிஷ்டம்
நாகப் பிரதிட்டை என்பது சாரைப் பாம்பும், நாகப் பாம்பும் பாலுறவுக்கு இணைவது போல செதுக்கப்படும் கற்சிற்பத்தினை பிரதிட்டை செய்வதாகும். [1]இந்த சிலையை அரச மரமும், வேம்பு மரமும் இணைந்திருக்கும் இடத்தில் பிரதிட்டை செய்ய வேண்டும். இவ்வாறு நாகசிற்பத்தினை பிரதிட்டை செய்வதால் நாக தோசம் என்ற நம்பிக்கை இந்து மக்களிடம் நிலவுகிறது.
நாக தோசத்தினை தீர்க்க இந்த பரிகாரம்தான் விஷேசம் என்று மனுநீதி நூலில் கூறப்பட்டிருக்கிறது. [2]இவ்வாறு நாகப் பாம்பினை பிரதிஷ்டை செய்ய சில சிறப்பான தலங்களும் கூறப்படுகின்றன.
வரிசை எண் | இறைவன் | ஊர் |
---|---|---|
1 | இராமநாதர் | இராமேசுவரம் |
2 | முத்தாலபரமேசுவரியம்மன் | பரமக்குடி |
3 | மகுடேசுவரர் | கொடுமுடி |
4 | அனந்தீசுவரர் | சிதம்பரம் |
5 | முத்துக்குமாரர் | பரங்கிப்பேட்டை |
6 | நாகராசா சுவாமி | நாகர்கோயில் |
7 | குமரக்கோட்ட முருகன் | காஞ்சிபுரம் |
8 | பச்சைவண்ணப் பெருமாள் | காஞ்சிபுரம் |
9 | பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் | அமிர்தபுரி |
10 | ஆதிகேசவப் பெருமாள் | சிறீ பெரும்புதூர் |
11 | நஞ்சுடேசுவரர் | காரமடை |
12 | வரசித்தி விநாயகர் | காணிப்பாக்கம் |
13 | சுப்பிரமணியர் | பில்லூர், கோவனூர் |
14 | திருவேட்டீசுவரர் | திருவல்லிக்கேணி |
15 | தேனுபுரீசுவரர் | மாடம்பாக்கம் |
16 | இரவீசுவரர் | வியாசர்பாடி |
17 | அருணசடேசுவரர் | திருப்பனந்தாள் |
18 | சுப்பிரமணிய சுவாமி | குமாரவயலூர் |
19 | நாகராசர் | மாளா |
20 | பாம்பு மேக்காடுமன | திருச்சூர் |
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ http://koyil.siththan.com/archives/date/2012/04/page/21[தொடர்பிழந்த இணைப்பு] http://koyil.siththan.com/archives/date/2012/04/page/21[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தோஷங்களைப் போக்கும் நாக சதுர்த்தி வழிபாடு மாலை மலர் இலவச இணைப்பு பக் 38