சாரைப்பாம்பு
(சாரைப் பாம்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாரைப்பாம்பு Oriental Ratsnake | |
---|---|
இரு சாரைப்பாம்புகள் நடனமாடும் காட்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலூர்வன
|
துணைவரிசை: | |
குடும்பம்: | Colubridae
|
பேரினம்: | Ptyas
|
இனம்: | P. mucosus
|
இருசொற் பெயரீடு | |
Ptyas mucosus (லின்னேயஸ், 1758) | |
வேறு பெயர்கள் | |
Ptyas mucosa |
சாரைப்பாம்பு (Ptyas mucosus, Indian Ratsnake, அல்லது Oriental Ratsnake) எனப்படுவது தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஒரு நச்சுத் தன்மையற்ற பாம்பு. இவ்வகைப் பாம்புகள் நாகப்பாம்புகளுடன் உடலுறவு கொள்ளும் என்ற பரவலான நம்பிக்கையானது முற்றிலும் தவறானது ஆகும்.[1][2][3]
உடல் தோற்றம் பற்றிய விளக்கம்
தொகு- கழுத்தை விட தலையின் அளவு பெரியது.
- கண்கள் பெரிய அளவோடும் கண்மணி (pupil of the eye) வட்டமாகவும் இருக்கும்.
- செதில்கள் வழுவழுப்பாகவும் மேல்வரிசை இணைப்புடையதாகவும் இருக்கும்.
நிறம்
தொகு- சாரைப்பாம்பு பல நிறங்களில் காணப்படுகிறது - வெளிர் மஞ்சள், ஒலிவு பச்சை [சைதூண்] - மஞ்சள் கலந்த பச்சை, பழுப்பு மற்றும் கருப்பு.
- உடலில் கருங்குறிகள் காணப்படுகின்றன - குறிப்பாக, வாலில் தெளிவாகக் காணப்படுகின்றன.
- உடலின் அடிப்பகுதியில் தெளிவான கரும் பட்டைகள் காணப்படுகின்றன.
உடல் அளவு
தொகு- பொரியும் போது: 32 – 47 செ.மீ
- முதிர்வடைந்த பின்: 200 செ.மீ
- அதிகபட்சமாக: 350 செ.மீ
இயல்பு
தொகு- மிக வேகமாக நகரக்கூடியது; சுறுசுறுப்பாக இயங்கக்கூடியது.
- பகலிரவு வேட்டையாடி.
- நல்ல மரமேறி.
- பல்வகை வாழ்விடங்களிலும் வாழக்கூடியது -- கடற்கரையோரம், வறண்ட பிரதேசம், நீர் நிறைந்த இடம், மலைப்பாங்கான இடம், திறந்தவெளி மற்றும் காடு.
- எலி வலைகளும், கரையான் புற்றுகளும் சாரைப்பாம்பின் விருப்பமான தங்குமிடங்கள்.
உணவு
தொகுமுட்டை
தொகு- மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை முட்டையிடும் காலம்.
- 8 – 22 முட்டைகள் வரை இடப்படுகின்றன.
தனித்துவமான இயல்புகள்
தொகு- பிடிக்க முயன்றால் மிக வேகமாக தப்பித்து விடும் -- அல்லது தப்பிக்க முனையும்.
- சுற்றி வளைக்கப்பட்டால், கழுத்தையும் உடலின் முன் பகுதியையும் உப்பமாறு செய்து, ஒரு வித முனகல் அல்லது சன்னமான உருமல் சத்தத்தை ஏற்படுத்தும்.
- வளர்ந்த பெரிய சாரைப்பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் நச்சுத்தன்மை அற்றது; ஆபத்தை விளைவிக்காது.
பரவல்
தொகுதெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் காணப்படுகிறது -- கடல் மட்டத்திலிருந்து 4000 மீ உயரம் வரை.
சாரைப்பாம்பு -- படிமங்கள்
தொகு-
வாய் திறந்த நிலையில்
-
தலையின் மேல்பக்க காட்சி
-
தலையின் கீழ்பக்கம்
-
வயிற்றுப்பகுதி
-
செதில்கள்
-
நீண்ட வால்
-
பொட்டு எலும்புகள்
உருவ ஒற்றுமை கொண்ட பிற பாம்புகள்
தொகு-
நாகப்பாம்பு
-
Banded Racer
-
இராச நாகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Wogan, G.; Srinivasulu, C.; Srinivasulu, B.; Papenfuss, T.; Shafiei Bafti, S.; Orlov, N.L.; Ananjeva, N.B.; Deepak, V. et al. (2021). "Ptyas mucosa". IUCN Red List of Threatened Species 2021: e.T164644A1063584. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T164644A1063584.en. https://www.iucnredlist.org/species/164644/1063584. பார்த்த நாள்: 3 July 2023.
- ↑ The Reptile Database:Ptyas mucosa, Reptile-database.org.
- ↑ Boulenger, G.A. 1893. Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families ... Colubridæ Aglyphæ, part. Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, Printers). London. xiii + 448 pp. + Plates I.- XXVIII. (Zamenis mucosus, pp. 385–386.)