நாகரம்

கட்டிடக் கலை பாணி

நாகரம் என்பது இந்திய இந்துக் கோயிற் கட்டுமானங்களுள் வட இந்திய பகுதிகளில் செல்வாக்குப் பெற்றிருந்த கலைப் பாணியாகும். சதுர வடிவான அடித்தளமுடைய சிகரத்தைக் கொண்ட கோயில்களை நாகரக் கட்டுமானங்கள் என வகைசெய்வர். இம் மரபில் அமைந்த கோயில்கள் பொதுவாக குப்தர் காலம் முதலாகவே பெரும்பாலும் அறியப்படுகின்றது. பூமர, நச்சனகுட்டார, ஏரான், திகாவா, சாஞ்சி முதலான இடங்களில் இவ்வகைக் கோயில்களைக் காணலாம் என்பர். கோயில் அமைப்பில் சதுரவடிவான இறையகம், முன் மண்டபம் என்பன பொதுவாய் அமைந்தனவாகும். தென்னிந்தியாவின் திராவிட மற்றும் தக்கணத்து வேசரக் கலைப் பாணிகளுடன் ஒப்பிடுகையில் நாகர கட்டுமானங்கள் வனப்புக் குறைந்தன என்றே கூறலாம்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகரம்&oldid=3187256" இலிருந்து மீள்விக்கப்பட்டது