நாகா இனங்களின் பாரம்பரிய பண்டிகைகளின் பட்டியல்
ஆண்டின் ஒவ்வொரு மாதங்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதால் நாகலாந்து 'திருவிழாக்களின் நாடு' என்று அழைக்கப்படுகிறது. நாகலாந்து பழங்குடியினரின் அடிப்படை தொழில் விவசாயம் ஆகும். எனவே அவர்களின் அனைத்து திருவிழாக்களும் விவசாயம் மற்றும் இயற்கையின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துதல் மற்றும் மகிழ்வித்தல் அத்தோடு அவர்களின் எளிய வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. நாகலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர் பதினேழு [1] வகைகளில் உள்ளனர். நாகலாந்து அரசால் அங்கீகரிக்கப்படாத பிற பழங்குடியினரும் சிறுபான்மையாக உள்ளனர்.ஒவ்வொரு நாகா பழங்குடியினருக்கும் தனித்துவமான மற்றும் உள்ளுர் திருவிழாக்கள் உள்ளன.
பட்டியல்
தொகுகுழு சார்ந்த திருவிழாக்கள்:
திருவிழா | பழங்குடிகள் | நடைபெறும் நேரம் |
---|---|---|
அயோலாங் | கொன்யாக் | ஏப்ரல் (முதல் வாரம்) |
சாகா, கான்- ங்காய், ஹெகா என்'கி, எம்லீ-ங்யி | Zeliangrong சமூகங்கள் - ( Liangmei, Rongmei, மற்றும் Zeme ) | Melei-Ngyi க்கு டிசம்பர் (கடைசி வாரம்), 10 மார்ச் |
சவான் கும்ரின் | அனல் | அக்டோபர் (23) |
சித்துனி | மாவோ | ஜனவரி (7) |
லூயிரா ஃபானிட் | தங்குல் | பிப்ரவரி/மார்ச் |
Metümnyo | யிம்கியுங் | ஆகஸ்ட் (இரண்டாம் வாரம்) |
மியு | கியாம்நியுங்கன் | மே (இரண்டாம் வாரம்) |
மோட்சு | Ao | மே (முதல் வாரம்) |
முங்முங் | சங்கடம் | செப்டம்பர் (முதல் வாரம்) |
Monyü | Phom | ஏப்ரல் (முதல் வாரம்) |
நக்னியூலம் | சாங் | ஜூலை (இரண்டாம் வாரம்) |
ங்காடா | ரெங்மா | நவம்பர் (கடைசி வாரம்) |
செக்ரெனி, டெ-ல் குகு | அங்கமி | பிப்ரவரி, ஜூலை |
Sükhrünyie, Tsükenyie | சகேசங் | ஜனவரி & மார்ச்/ஏப்ரல் |
தூனி | பூமை | ஜனவரி (18 முதல் 22 வரை) |
டோகு எமோங் | லோதா | நவம்பர் (முதல் வாரம்) |
துலூனி, அஹுனா | சுமி | ஜூலை |
யெம்ஷி | போச்சூரி | செப்டம்பர்/அக்டோபர் |
இனங்களுக்கிடையிலான திருவிழாக்கள்
தொகுபல்வேறு குழுக்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்காக , நாகாலாந்து அரசாங்கம் 2000 ஆம் ஆண்டு முதல் வருடாவருடம் ஹார்ன்பில் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. பழங்குடியினருக்கு இடையிலான பிற திருவிழாக்கள் லுய் நகாய் நி மற்றும் நாகா புத்தாண்டு விழா போன்றவையாகும். [2]
திருவிழா | இனக்குழு | நேரம் |
---|---|---|
ஹார்ன்பில் திருவிழா | நாகாலாந்தின் நாகர்கள் | டிசம்பர் (1–10) |
Lui Ngai Ni | மணிப்பூரின் நாகர்கள் | பிப்ரவரி (14–15) |
நாகா புத்தாண்டு விழா | மியான்மரின் நாகர்கள் | ஜனவரி (மத்தியில்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "LIST OF FESTIVALS NAGALAND". Nagaland GK. 1 October 2017. பார்க்கப்பட்ட நாள் 6 November 2022.
- ↑ "Tourism: General Information". Government of Nagaland. Archived from the original on 30 October 2011. பார்க்கப்பட்ட நாள் 6 November 2022.