ஹார்ன்பில் திருவிழா

இருவாட்சி திருவிழா (Hornbill Festival), இந்திய மாநிலமான நாகாலாந்தில் நடைபெறும் திருவிழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும்[1]

இருவாட்சி திருவிழா
Hornbill Festival
காலப்பகுதிவருடாந்திர விழா
நிகழ்விடம்கிசாமா பாரம்பரிய கிராமம்
கோகிமா, நாகாலாந்து, இந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்2000–முதல்
துவக்கம்1 திசம்பர் 2000; 23 ஆண்டுகள் முன்னர் (2000-12-01)
முந்தைய நிகழ்வு1–5 திசம்பர் 2021
அடுத்த நிகழ்வு1–10 திசம்பர் 2022
புரவலர்கள்நாகாலாந்து அரசு
வலைத்தளம்
hornbillfestival.com
நாகா பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனத்தை ஒத்திகை பார்க்கின்றனர்.
இந்திய இருவாட்சி பறவை

பின்னணி

தொகு

நாகாலாந்தில் வாழும் பழங்குடியின மக்களில் பெரும்பாலானோர் உழவுத் தொழிலை நம்பியுள்ளனர். எனவே, அவர்களின் திருவிழாக்களும் உழவுத் தொழிலை அடிப்படையானவையாக இருக்கின்றன. இந்த மக்கள் திருவிழாக்களில் கலந்துகொள்வதை புனிதமாக கருதுகின்றனர்.[2]

பழங்குடியின மக்களின் ஒற்றுமையை பேணி காக்கவும், பண்பாட்டை போற்றவும் நாகாலாந்து அரசு தீர்மானித்தது. 2000ஆம் ஆண்டு முதல் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.[3]

 
ஹார்ன்பில் விழாவில் போடோ-கச்சாரி பழங்குடி பெண்கள்

பழங்குடியினர் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளில் இருவாய்ச்சி பறவைக்கு முக்கியத்துவம் உண்டு. அதன் காரணமாக, இந்த திருவிழாவுக்கு பறவையின் பெயர் முன்னிறுத்தப்படுகிறது.

பாரம்பரிய கலை வேலைப்பாடுகளைக் கொண்ட ஓவியங்களும், சிலைகளும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. பழங்குடியின மக்கள் தங்கள் நாட்டுப்புற பாடல்களை பாடியும், பாரம்பரிய நடனமாடியும், பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியும் மகிழ்கின்றனர்.[4]

திருவிழா

தொகு

நாகாலாந்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் விழாவாக இது ஒரு வாரம் நடைபெறுகிறது. இந்த விழாவில் வண்ணமயமான நிகழ்ச்சிகள், கைவினைப்பொருட்கள் கண்காட்சி, விளையாட்டு, உணவு கண்காட்சிகள், மற்றும் கொண்டாட்டம் என இந்த விழாவில் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஓவியங்கள், மர வேலைப்பாடுகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட பாரம்பரிய கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.[5]

திருவிழாவின் சிறப்பம்சமாக பாரம்பரிய நாகா மோருங்ஸ் கண்காட்சி மற்றும் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை, உணவுக் கடைகள், மூலிகை மருந்துக் கடைகள், மலர் கண்காட்சிகள் மற்றும் விற்பனை, பண்பாட்டினைப் பிரதிபலிக்கும் பாடல்கள் மற்றும் நடனங்கள், ஆடை அலங்கார கண்காட்சி, நாகாலாந்து அழகி அழகுப் போட்டி, பாரம்பரிய வில்வித்தை, நாகா மல்யுத்தம், உள்நாட்டு விளையாட்டுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.[6]

இவ்விழா நாகலாந்து இன மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்தியாவின் கூட்டாட்சி ஒன்றியத்தில் நாகாலாந்தின் தனித்துவமான மாநிலமாக அடையாளத்தை வலுப்படுத்துகிறது. கிராமங்களில் உள்ள முதியவர்கள் நிறைய பேர் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கோஹிமாவுக்குச் செல்கின்றனர். இங்கு இவர்கள் நாகாலாந்தின் மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பாக உள்ளதாகவும், இதனால் இந்நிகழ்ச்சி கலாச்சார ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.[7]

இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று பன்னாட்டு இருவாட்சி பாறைத் திருவிழா. இத்திருவிழா இந்திரா காந்தி அரங்கில் நடைபெறுகிறது. இதில் உள்ளூர் மற்றும் பன்னாட்டு சுற்றாட்டு இசைக்குழுக்கள் பங்கேற்கின்றன.[8]

பொருளாதார முக்கியத்துவம்

தொகு

இருவாட்சித் திருவிழா, நாகலாந்து மாநிலத்தின் சுற்றுலா மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.. நாகாலாந்தில் நடைபெறும் இருவாட்சி திருவிழா, நாகாலாந்தின் பல்வேறு இனக்குழுக்களைப் பற்றிய தகவல்களை சுற்றுலாப் பயணிகள் பெற வாய்ப்ப்பாக உள்ளது.[7] இது மாநிலத்தின் வளமையான பண்பாட்டுப் பாரம்பரியம், வளமான கட்டிடக்கலை மற்றும் மாநில உணவுகள் பற்றிய புரிதலை வளர்க்கிறது.[9]

படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Nagaland – Hiking and Hornbill Festival in India". AlienAdv Blog. Archived from the original on 2015-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  2. Hornbill Festival - Where the Action is... பரணிடப்பட்டது 2011-11-19 at the வந்தவழி இயந்திரம், EF News International. 16 November 2011.
  3. Hornbill Festival of Nagaland பரணிடப்பட்டது 2017-09-09 at the வந்தவழி இயந்திரம், India-north-east.com
  4. "Hornbill Festival 2015 - Hornbill Rock Contest". www.hornbillfestival.com. Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  5. Nagaland's Hornbill Festival Goes International. Outlook India.com. 1 December 2009.
  6. Jaini, Kshaunish (6 சனவரி 2017). "Nagaland – Hiking and Hornbill Festival in India". Alien Adventure. Archived from the original on 5 December 2017. பார்க்கப்பட்ட நாள் 5 December 2017.
  7. 7.0 7.1 "' A window to the northeast'". The Hindu. 1 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.
  8. "Hornbill Festival 2015 - Hornbill Rock Contest". www.hornbillfestival.com. Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  9. "'Ignore the potholes, enjoy the ride'". The Hindu. 22 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-01-17.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்ன்பில்_திருவிழா&oldid=3777989" இலிருந்து மீள்விக்கப்பட்டது