கிசாமா பாரம்பரிய கிராமம்

கிசாமா பாரம்பரிய கிராமம் (Kisama Heritage Village)(நாகா பாரம்பரிய கிராமம்) என்பது இந்திய மாநிலமான நாகாலாந்தின் கோகிமா மாவட்டத்தில் உள்ள கிக்வேமா மற்றும் பெசாமா கிராமங்களுக்கு இடையே உள்ள மலைச் சரிவுகளில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய கிராமமாகும். இந்தப் பாரம்பரிய மலைக் கிராமத்தில் ஆண்டுதோறும் இருவாட்சி திருவிழா நடைபெறுகிறது.[1]

கிசாமா பாரம்பரிய கிராமம்
கிசாமா பாரம்பரிய கிராமம்
இடம் கிக்வேமா-பெசாமா, கோகிமா மாவட்டம், நாகாலாந்து

இந்தப் பாரம்பரிய கிராமம் நாகாலாந்தின் அனைத்து 17 இனக்குழுக்களுக்கும் சொந்தமானது. இக்கிராமம் உண்மையான பாரம்பரிய நாகா கிராமத்தின் உணர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.[2]

பெயர்

தொகு

கிசாமா என்ற இதன் பெயர் இரண்டு அண்டை கிராமங்களின் பெயர்களின் தொகுப்பாகும். கி குவேமாவிலிருந்தும் சா என்பது பெசாமவிலிருந்தும் மா என்பது இரண்டு சொல்லிருந்தும் பெறப்பட்டது.[3]

அமைவிடம்

தொகு

கிசாமா பாரம்பரிய கிராமம் நாகாலாந்தின் தலைநகரான கோகிமாவிற்கு தெற்கே. கிக்வேமா மற்றும் பெசாமா இடையே ஆசிய நெடுஞ்சாலை 1 / தேசிய நெடுஞ்சாலை 2-ன் மேற்பகுதியில் தளம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kisama Heritage Village". www.kohima.nic.in. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
  2. "Kisama Heritage Village". www.mynagaland.online. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
  3. "Naga Heritage Village, Kohima". Holidify. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kisama Heritage Village
என்பதில் ஊடகங்கள் உள்ளன.