நாகா நடனம்
- இது நாகா இன மக்களின் நடனத்தை பற்றிய கட்டுரை அல்ல.
நாகா நடனம், இந்திய மாநிலமான ஒடிசாவின், புரி நகரத்தில் நடத்தப்படுகிறது. இந்து சமய விழாக்களின் போது ஆண்கள் நடனமாடுவர். தலையில் வெள்ளி கிரீடத்தை அணிந்து கொண்டும், முகத்தில் போலியான தாடியை ஒட்டிக் கொண்டும் ஆடுவர். கைகளில் மூங்கில் பட்டைகள் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். மேளம் அடிப்பவர்களின் இசைக்கு ஏற்ப நடனமாடுகின்றனர்.[1]