நாகோ ஏரி

இந்தியாவிலுள்ள ஏரி

நாகோ ஏரி (Nako Lake) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னவுர் மாவட்டத்தின் பூக் துணைப்பிரிவில் உள்ள ஓர் உயரமான ஏரியாகும். நாகோ கிராமத்தின் எல்லையின் ஒரு பகுதியாக இருப்பதால் இதற்கு நாகோ ஏரி எனப் பெயரிடப்பட்டது. ஏரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,662 மீட்டர் (12,014 அடி) உயரத்தில் உள்ளது. வில்லோ மற்றும் பாப்லர் மரங்களால் ஏரி சூழப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் நான்கு புத்த கோவில்கள் உள்ளன. ஏரிக்கு அருகில் துறவி பத்மசாம்பவரின் பாதம் போன்ற ஒரு தோற்றம் அமைந்துள்ளது. பல மைல்களுக்கு அப்பால் தாசிகாங்கு என்ற கிராமம் உள்ளது. அதைச் சுற்றி பல குகைகள் உள்ளன. இங்கிருந்துதான் குரு பத்மசாம்பவா தியானம் செய்தார் என்றும் அவரை பின்பற்றுபவர்களுக்கு சொற்பொழிவுகள் செய்தார் என்றும் நம்பப்படுகிறது. அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் பனி நீர் பால்நதி போல் விழுகிறது. தேவதைகளின் சொர்க்க மண்டலம் என்று புராணங்கள் இந்த இடத்தைப் பற்றி கூறுகின்றன. குகைகளில் ஒன்றில் இந்த தேவதைகள் அல்லது பிற தேவதைகளின் நேரடி கால்தடங்களை இன்னும் பார்க்க முடியும் என்றும் அறியப்படுக்கிறது. இந்த பள்ளத்தாக்கு மக்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். பின்தொடர்பவர்கள் லடாக் மற்றும் இசுபிட்டி பள்ளத்தாக்கு போன்ற இடங்களிலிருந்து இங்கு வருகிறார்கள்.[1]

நாகோ ஏரி
Nako Lake
நாகோ ஏரியின் காட்சி
இமாச்சலப் பிரதேசத்தில் நாகோ ஏரியின் இருப்பிடம்
இமாச்சலப் பிரதேசத்தில் நாகோ ஏரியின் இருப்பிடம்
நாகோ ஏரி
Nako Lake
இமாச்சலப் பிரதேசத்தில் நாகோ ஏரியின் இருப்பிடம்
இமாச்சலப் பிரதேசத்தில் நாகோ ஏரியின் இருப்பிடம்
நாகோ ஏரி
Nako Lake
அமைவிடம்கின்னௌர் மாவட்டம்
ஆள்கூறுகள்31°52′47″N 78°37′39″E / 31.879639°N 78.627632°E / 31.879639; 78.627632
வகைஉயரமான ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,662 m (12,010 ft)
மேற்கோள்கள்Himachal Pradesh Tourism Dep.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள நாகோ ஏரியில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்திய இமயமலை சிகரங்களின் பிரதிபலிப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. "himachaltourism.gov.in". Archived from the original on 24 March 2010. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகோ_ஏரி&oldid=4180308" இலிருந்து மீள்விக்கப்பட்டது