நாக்ஸ் கோட்டை

நாக்ஸ் கோட்டை (Fort Knox) என்பது ஐக்கிய அமெரிக்காவின், கென்டக்கி மாநிலத்தின், லூயிவில் நகரில் உள்ள அமெரிக் படைத்துறையின் கேந்திரமாக உள்ளது ஆகும். இது அமெரிக்காவின் உத்தியோகபூர்வ தங்க இருப்பின் ஒரு பெரிய பகுதியைப் பாதுகாப்பாக வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது 109,000 ஏக்கர் (170 சதுர மைல், 441 km²) பரப்பளவைக் கொண்டது. புலிட், ஹார்டின், மீட் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இங்கு தற்போது இராணுவ மனிதவள கட்டளை, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆர்ட் கேடட் கட்டளை மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் இராணுவம் அன்ட் அன்ஷன் கமாண்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய இராணுவ மனிதவள மேம்பாட்டு மையம் உள்ளது. 60 ஆண்டுகளாக ஃபோர்ட் நாக்ஸ் யு.எஸ். ஆர்மி ஆர்மோர் சென்டர் மற்றும் யு.எஸ். ஆர்மி ஆர்மோர் பள்ளி (தற்போது பென்னிங் கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது), மேலும் இராணுவம் மற்றும் ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு இரண்டும் எம்1 ஆப்ராம்ஸ் கவச வாகணப் பயிற்சியில் ஈடுபடுகின்றன. கோட்டையில் உள்ள ஜெனரல் ஜோர்ஜ் பட்டன் அருங்காட்சியகத்தில் அமெரிக்க இராணுவத்தின் குதிரைப்படை மற்றும் கவச வீரர்களின் வரலாறு, மற்றும் ஜெனரல் ஜார்ஜ் எஸ். பாட்டின் வாழ்க்கை வரலாறு, ஜார்ஜ் போன்றவற்றைக் காணலாம்[2] அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், லிங்கனின் கெடிஸ்பார்க் உரை, மாக்னா கார்ட்டா (இங்கிலாந்தின் மன்னன் ஜான் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து அமெரிக்காவை நீக்கிய ஒப்பந்தம்) ஆகியவற்றின் மூலப் பிரதிகள் இங்கு சேமிக்கப்பட்டு வருகின்றன.[3]

நாக்ஸ் கோட்டை
Fort Knox
கென்டக்கி
KYMap-doton-FortKnox.PNG
ஆள்கூறுகள் 37°53′34″N 85°58′29″W / 37.8928°N 85.9747°W / 37.8928; -85.9747
வகை இராணுவ மையம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது 1861–1865: கட்டப்பட்டது
1865–தற்போதுவரை: ஐக்கிய அமெரிக்கா
இட வரலாறு
கட்டிய காலம் 1918
பயன்பாட்டுக்
காலம்
1861–1865: உள்நாட்டுப் போர்
1865–1903: Settlement
1903–1918: பயிற்சி மைதானம்
1918–1925: கேம்ப் நோக்ஸ்
1925–1928: தேசிய வனம்
1928–1931: நாக்ஸ் முகாம்
1932–தற்போதுவரை: நாக்ஸ் கோட்டை
காவற்படைத் தகவல்
தற்போதைய
தளபதி
MG Christopher P. Hughes[1]

தங்க வைப்பகம்தொகு

 
யு.எஸ் கோல்ட் புல்லியன் வைப்பகம்

இந்தக் கோட்டை 1936 திசம்பரில் கட்டி முடிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவம். 1937 சனவரியில் பல கப்பல்கள் மூலமாகத் தங்கத்தை இங்கே எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்தது. ஐக்கிய அமெரிக்கக் கருவூலத் திணைக்களமானது 1937 ஆம் ஆண்டிலிருந்து இந்த தங்க வைப்பகத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதி கருவூலத் திணைக்களத்தால் மட்டுமே இயக்கப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. "U.S. Army Cadet Command and Fort Knox Leadership".
  2. "General George Patton Museum of Leadership - Home". மூல முகவரியிலிருந்து 18 February 2013 அன்று பரணிடப்பட்டது.
  3. ஜி.எஸ்.எஸ். (2017 நவம்பர் 18). "தங்கக் கோட்டை". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 18 நவம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்ஸ்_கோட்டை&oldid=2445151" இருந்து மீள்விக்கப்பட்டது