நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்

அங்கதக் கவிதை நூல்

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய அங்கதக் கவிதைநூலாகும். இது நாஞ்சில்நாட்டில் நிலவி வந்த 'மருமக்கள் வழி' சொத்துரிமை முறையின் தீங்குகளை அந்த முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்வதுபோல பாடப்பட்டிருக்கின்றது. 1916ல் ஒரு பழைய சுவடி என்ற பேரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையவர்களால் திருவனந்தபுரத்தில் இருந்து வெளி வந்த தமிழன் என்ற பத்திரிகை இதழில் தொடராக வெளிவந்தது. 1942ல் புதுமைப்பதிப்பகம் முதன் முதலில் இந்நூலைப் புத்தகமாக வெளியிட்டது. தமிழன் பத்திரிக்கை ஆசிரியர் எஸ். முத்துசாமிப் பிள்ளை அவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டு காலச்சுவடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

மூலம்தொகு