நாகர்கோவில்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
(நாஞ்சில்நாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாகர்கோவில் (Nagercoil), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இம்மாநகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால், இவ்வூர் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகரமானது தமிழகத்தின் 12-ஆவது பெரிய நகரமாகும்.[3] இம்மாநகரின் வழியாக, பழையாறு ஓடுகிறது. நாகர்கோவில் மாநகரமானது, தமிழகத்தில் உள்ள ஒரே 'இயற்கை மாநகரம்' (greenest city) ஆகும்.

—  மாநகராட்சி  —
நாகர்கோவில்
அமைவிடம்: நாகர்கோவில், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°20′36″N 77°25′19″E / 8.343300°N 77.421900°E / 8.343300; 77.421900
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மாநகராட்சி மேயர் திரு. மகேஷ் தி.மு.க.
சட்டமன்றத் தொகுதி நாகர்கோவில்
சட்டமன்ற உறுப்பினர்

எம். ஆர். காந்தி (பாஜக)

மக்கள் தொகை 2,24,849 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


82 மீட்டர்கள் (269 அடி)

குறியீடுகள்


நாகர்கோவில் நகராட்சி, பிப்ரவரி 14, 2019 அன்று தமிழக அரசால் மாநகராட்சியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி. க. பழனிசாமியால் தரம் உயர்த்தப்பட்டது .[4][5]

புவியியல்

தொகு

கன்னியாகுமரி மாவட்டத்தில், (8°11′00″N 77°24′43″E / 8.1833°N 77.4119°E / 8.1833; 77.4119) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாகர்கோவில் பகுதி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

 
 
நாகர்கோவில்
நாகர்கோவில் (Kanyakumari)

மக்கள் பிரதிநிதிகள்

தொகு

பொருளாதாரம்

தொகு

தேனீ வளர்த்தல், பனை, தென்னை, மா, பலா, வாழை, தானியம், பூ, மற்றும் ஏனைய இதர வேளாண் பொருட்களை பயிரிடுதல். மேலும் சிறந்த காய், கனிகளை ஏற்றுமதி செய்தல், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல் மற்றும் ஏற்றுமதி. தென்னை ஓலைமுடைதல், பனை ஓலை முடைதல், பூ வணிகம் செய்தல், கைத்தறி நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதனிடுதல், ஆடு, மாடு, கோழி வளர்த்தல், சுற்றுலா தளங்களை மேம்படுத்தல் மற்றும் பேணி காத்தல் , காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்தல், காடு, மேடுகளை செம்மைப்படுத்தி பாதுகாத்தல், திருத்தலங்களையும் அதன் வழிபாட்டு முறைகளையும் செவ்வனே பண்டைய முன்னோர்கள் வழி முறையை கடைபிடித்து பாரம்பரிய முறையை நிலை நாட்டுதல், நாடு தழுவிய முறையை உலகிற்கு ஓர் சான்றாக பறைசாற்றுதலும் நாஞ்சில் நாட்டின் ஓர் பொருளாதார பணிகளில் ஒன்றாகும். இம்மாநகரத்தில் பல தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளது.

கோயில்கள்

தொகு
  • துவாரகபதி விநாயகர் திருக்கோவில், பரசுராமன் பெருந்தெரு.
  • நாகராஜா கோவில்.
  • அழகம்மன் கோவில்.
  • பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவில்
  • ஸ்ரீ அற்புத வினாயகர் கோவில், மீனாட்சிபுரம்.
  • மணியடிச்சான் கோவில், அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோவில்.
  • கிருஷ்ணன் கோவில்
  • இடர்தீர்த்த பெருமாள் கோவில், வடிவீஸ்வரம்.
  • தாணுமாலயன் (சிவன், பிரம்ம, விஷ்ணு) கோவில், சுசீந்திரம்.
  • அய்யா வைகுண்டர் தலைமைப் பதி, சுவாமிதோப்பு.
  • நடுத்தீர்ப்பு கோவில், உடையப்பங்குடியிருப்பு.
  • கைலாச நாதர் கோவில், மேலக்காட்டுவிளை.
  • மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்.

கிறிஸ்தவ ஆலயங்கள்

தொகு
  • புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு.
  • இயேசுவின் திருஇருதய ஆலயம், வேப்பமூடு,நாகர்கோவில்
  • புனித அல்போன்ஸா திருத்தலம், நாகர்கோவில்
  • புனித அந்தோனியார் ஆலயம்,குருசடி.
  • கிறிஸ்து அரசர் ஆலயம்,வெட்டூர்ணிமடம்.
  • வேதநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்.
  • அன்னை மேரி மாதா ஆலயம், கீழக் காட்டுவிளை.
  • புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம்,மறவன்குடியிப்பு.
  • புனித வளனார் ஆலயம்,வட்டக்கரை.
  • பரிசுத்த திருக்குடும்ப ஆலயம்,மேலராமன்புதூர்.
  • புனித லூர்து அன்னை ஆலயம்,புன்னைநகர்.
  • புனித குழந்தை இயேசு ஆலயம்,பொன்னப்பநாடார்நகர்.
  • புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்,அனந்தன் நகர்.
  • புனித ஆரோக்கியநாதர் ஆலயம், புதுக்குடியிருப்பு.
  • புனித அந்தோனியார் திருத்தலம்,பெரியகாடு.

பள்ளிகள்

தொகு
  • சதாவதானிசெய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி, இடலாக்குடி.(எஸ்.எஸ்.பி)
  • ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி
  • இராணி சேது இலக்குமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி(எஸ்.எல்.பி.)
  • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி
  • செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி
  • லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளி
  • கார்மல் மேல்நிலைப் பள்ளி
  • புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி
  • கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி
  • தேசிக விநாயகம் தேவஸ்தானம் மேல்நிலைப் பள்ளி(டிவிடி)
  • புனித மிக்கேல் உயர்நிலை பள்ளி (வேதநகர்)
  • லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளி சியோன்புரம்.
  • அரசு தொடக்க பள்ளி கீழக்காட்டுவிளை.
  • எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி,வடசேரி.
  • அரசு மேல்நிலைப பள்ளி,வடசேரி.
  • அரசு மேல்நிலை பள்ளி தெங்கம்புதூர்
  • லண்டன் மிஷன் புத்தளம் சர்ச் மேல்நிலை பள்ளி புத்தளம்

கல்லூரிகள்

தொகு
  • கேப் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, லெவன்ஜிபுரம்
  • பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி
  • தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி
  • ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி
  • அரசினர் கலைக் கல்லூரி
  • அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
  • அரசினர் பொறியியல் கல்லூரி
  • அரசு தொழிற்பயிற்சி கல்லூரி
  • சிவந்தி ஆதித்தினார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிள்ளையார்புரம்.
  • ‌‌‌ வைகுண்டர் தொழில்நுட்பக் கல்லூரி
  • கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி
  • புனித சவேரியார் பொறியியல் கல்லூரி
  • பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி
  • மார்னிங் ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி
  • காமராஜ் தொழில்நுட்பக் கல்லூரி, பழவிளை
  • காமராஜ் கல்வியியல் கல்லூரி
  • கலைவாணர் பொறியியல் கல்லூரி
  • கலைவாணர் தொழில்நுட்பக் கல்லூரி
  • பயோனீர் குமாரசாமி கல்லூரி, வெட்டூர்னிமடம்.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 52 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 5,22,759 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 95% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20241 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,000 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,427 மற்றும் 381ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 61.06%, இசுலாமியர்கள் 8.89%, கிறித்தவர்கள் 29.94% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.[6]

கோயில்கள்

தொகு

இதன் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவில். நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா எனும் கோவிலின் பெயராலே இவ்வூருக்கு நாகர்கோவில் எனும் பெயர் வந்தது. இக்கோவில் சமணர்களால் கட்டப்பட்டது. மேலும் பரசுராமன் தெரு 500ஆண்டுகள் பழமையான துவராகபதி விநாயகர் திருக்கோவில் உள்ளது.

மேலும் நாகர்கோவிலில் இருந்து மேற்கு திசையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் பாண்டிய மன்னர்களால் உருவாக்க பட்ட பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் தைமாதம் நடைபெறும் தைப்பெரும் திருவிழாவின் 7 ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு பூதலிங்கசுவாமி கைலாச பர்வதம் ( ராவணேஸ்வரன்) வாகனத்தில் பவனி வரும் காட்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இங்கு உள்ள சிறிய பாறையின் மேல் இருந்து கிழக்கே பார்த்தால் பெண் ஒருவர் படுத்து கொண்டு இருப்பது போல் காட்சி அளிக்கும் தாடகை மலையின் பிரமாண்டத்தை காணலாம்.

புகழ் பெற்றவர்கள்

தொகு

போக்குவரத்து

தொகு

பேருந்து நிலையம்

தொகு

நாகர்கோவில் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம்

தொகு

மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர பேருந்துகள், கிராமங்களுக்கு செல்லும் நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறுகிய தொலைவுப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம்

தொகு

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இங்கு இருந்து இயக்கப்படுகின்றன. மேலும் ஒரு சில நகர பேருந்துகளும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிராமங்களுக்கு நகர பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.தொலைதூரப் பேருந்துகள் இந்நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி தனியார் பேருந்து நிலையம்

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இங்கு இருந்து இயக்கப்படுகின்றன. தொலைதூரப் பேருந்துகள் இந்நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களுக்கும் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகிறது.

தொடருந்து நிலையம்

தொகு

நாகர்கோவில் மாநகரம், இரண்டு தொடருந்து நிலையங்களைக் கொண்டது,

  1. நாகர்கோவில் சந்திப்பு
  2. நாகர்கோவில் டவுன்

இதில் நாகர்கோவில் சந்திப்பு நிலையம் முக்கியத் தொடர்வண்டி நிலையமாகும்.

சுற்றுலாத் தலங்கள்

தொகு

நாகர்கோவில் மாநகரத்தின் அருகேயுள்ள சுற்றுலாத்தலங்கள்:

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. https://kanniyakumari.nic.in/ta/tourist-place/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/
  4. நாகர்கோவில் மாநகராட்சியாகிறது
  5. CM Approved Nagarkovil Municipality into Municipal Corporation
  6. "நாகர்கோவில் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2023-01-20. பார்க்கப்பட்ட நாள் 2019-05-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்கோவில்&oldid=4135621" இலிருந்து மீள்விக்கப்பட்டது