பெருஞ்சாணி அணை
பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இந்த அணை பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.[1] இது கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத்தலமாகும். இவ்வணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும். இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ. கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.இதன் நீர் கொள்ளளவு 72 அடி ஆகும். இந்த அணை முன்னாள் முதலமைச்சா் காமராஜா் காலத்தில் கட்டப்பட்டது.
பெருஞ்சாணி அணை | |
---|---|
பெருஞ்சாணி அணை | |
அதிகாரபூர்வ பெயர் | பெருஞ்சாணி அணை |
நாடு | இந்தியா |
அமைவிடம் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு |
திறந்தது | டிசம்பர் 1952 |
உரிமையாளர்(கள்) | தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதார அமைப்பு |
அணையும் வழிகாலும் | |
வகை | Straight Gravity Masonry dam with concrete Spillway |
தடுக்கப்படும் ஆறு | பறளியாறு, a tributary of Tamiraparani River |
உயரம் | 36.27 மீட்டர்கள் (119.0 அடி) above foundation |
நீளம் | 308 மீட்டர்கள் (1,010 அடி) |
வழிகால்கள் | One |
வழிகால் அளவு | 894.91 m3 (31,603 cu ft) per second |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | பெருஞ்சாணி அணை |
மொத்தம் கொள் அளவு | Live storage 818,400,000 m3 (2.890×1010 cu ft) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 158.4 சதுர கிலோமீட்டர்கள் (61.2 sq mi) |
ஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-10-15.