மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில், குளச்சலுக்குத் தெற்கில் உள்ள மண்டைக்காடு என்னுமிடத்தில் உள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1]
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8°09′48″N 77°16′48″E / 8.1633°N 77.2799°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | பெண்களின் சபரிமலை |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கன்னியாகுமரி |
அமைவிடம்: | மண்டைக்காடு |
சட்டமன்றத் தொகுதி: | குளச்சல் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 64 m (210 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பகவதி அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மாசி மாதம் கொடை திருவிழா |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுமுற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி 'பகவதி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். 'மந்தைக்காடு' என்ற பெயரே மருவி, 'மண்டைக்காடு' என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது. [1] நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் மண்டைக்காடு எனும் ஊரில்,குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. திங்கள் சந்தை சென்று அங்கிருந்தும் பேருந்தில் செல்லலாம்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 64 மீட்டர் உயரத்தில், 8°09′48″N 77°16′48″E / 8.1633°N 77.2799°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமையப் பெற்றுள்ளது.[1]
அம்மன்
தொகுபுற்றில் சந்தன முகத்தோடு காட்சி தருகின்ற புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார்.[1] இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இப்புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாக புற்றுக்கோயிலில் பக்தர்கள் பால் ஊற்றுவதும், முட்டைகளை வைத்து வேண்டுவதும் உண்டு. ஆனால் இங்கு பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்த புற்றுக்கு தினமும அபிஷேகம் நடைபெறுகிறது. பூசாரி ஓர் ஏணி மரத்தை வைத்து அதில் ஏறி அம்மனுக்கு பூமாலைகளைச் சாற்றுகிறார். [2]
பெண்களின் சபரிமலை
தொகு15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ள பகவதி அம்மன் இக்கோயிலின் சிறப்பாகும். பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. [3] மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். அவ்விழாவின்போது பக்தர்கள் கோயிலின் சுற்றுப்புறம் முழுவதும் கூடியிருப்பர். அங்கு பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைப்பர். பொங்கல் பொங்கி வழியும்போது குலவையிட்டு அம்மனுக்கு நன்றி தெரிவிப்பர். மங்களங்கள் பொங்கச்செய்கின்ற தேவிக்குப் பெண்கள் செய்யும் நன்றிக் காணிக்கையாக இதனைக் கருதுகின்றனர்.[1]
திருவிழா
தொகுஅதிகாலை 5 மணி முதல் காலை 10.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.மாசித்திருவிழா 10 நாள்கள் இங்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். [3]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- தமிழ் தோட்டம் பரணிடப்பட்டது 2015-11-14 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிமேப்பியாவில் கோவில் அமைவிடம்