எம். ஆர். காந்தி
மாவிளை இராமசாமி நாடார் காந்தி (Mavilai Ramasamy Nadar Gandhi) இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் கீழமாவிலை, இராஜாக்கமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்தவர். இவருக்கு 75 வயதாகிறது. இவர் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் இந்துத்துவா இயக்கத்திற்காக திருமணம் செய்து கொள்ளாதவர்.
மா. இரா. காந்தி | |
---|---|
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 மே 2021 | |
முன்னையவர் | என். சுரேஷ்ராஜன் |
தொகுதி | நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி |
துணைத்தலைவர், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு | |
பதவியில் 2016 - 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மாவிளை இராமசாமி காந்தி 1945 (அகவை 78–79)[1] கீழமாவிளை, தெற்கு சூரங்குடி, இராஜாக்கமங்கலம் ஊராட்சி, கன்னியாகுமரி |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதீய ஜனசங்கம் |
புனைப்பெயர் | குட்டி காமராஜ் |
அரசியல் வரலாறு
தொகு1967-இல் பாரதிய ஜனசங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவராக இருந்தார். 1968 முதல் 1970 வரை ஜன சங்க கட்சியின் தென் மண்டல அமைப்பாளராகவும், 1970 முதல் 1975 வரை ஜனசங்க மாநில செயலாளராகவும் இருந்துள்ளார். 1975-இல் மிசா கால கட்டத்தில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தவர். 1980-இல் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புக்குழு உறுப்பினராகவும், 1981 முதல் 1986 வரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராகவும், 1986 முதல் 1992 வரை மாநில பொது செயலாளராகவும், 2000-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராகவும், 2001 முதல் 2006 வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், 2017 முதல் 2020 வரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராகவும், 2020 முதல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்றார்.
தேர்தல் வரலாறு
தொகுஎம். ஆர். காந்தி 1980-இல் நாகர்கோவில் தொகுதி, 1984-இல் குளச்சல் தொகுதி, 2006-இல் குளச்சல் தொகுதி, 2011-இல் கன்னியாகுமரி தொகுதி, 2016-இல் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் 6வது முறையாக நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் 1989-இல் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார்.[4] 2021 சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.காந்தி 88 ஆயிரத்து 804 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த படியாக திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், 77 ஆயிரத்து 135 வாக்குகள் பெற்றுள்ளார். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Desk, India com News (2 May 2021). "Nagercoil Election Result: Gandhi MR of BJP Wins With 1,8769 Votes, Defeats DMK". India News, Breaking News | India.com.
- ↑ நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் எம்.ஆர்.காந்தி வெற்றி
- ↑ "Nagercoil Election Result 2021 Live Updates: Gandhi M R of BJP Wins". www.news18.com. 2 May 2021.
- ↑ GANDHI M R, NAGERCOIL (KANNIYAKUMARI)
- ↑ BJP candidate defeats Suresh Rajan in Nagercoil