என். சுரேஷ்ராஜன்

இந்திய அரசியல்வாதி

சுரேஷ்ராஜன் (Suresh Rajan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக சுற்றுலாத்துறை முன்னாள் அமைச்சராவார். இவர் 31 மார்ச் 1963 அன்று நாகர்கோயிலில் பிறந்தவர். இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் தன் அரசியல் வாழ்வை தி.மு.க. இளைஞரணியில் இருந்து துவக்கினார். தமிழக சட்டமன்ற உறுப்பினராக 1996 ஆம் ஆண்டு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2001 ஆண்டைய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[2] மீண்டும் 2006 ஆண்டைய தேர்தலில் வெற்றி பெற்று சுற்றுலா மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சராகப் பணியாற்றினார். 2011-ல் நடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Tamil Nadu government website
  2. "Tamil Nadu 2011". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "திமுகவில் தேமுதிக குமரி மாவட்டச் செயலாளர்". தி இந்து (தமிழ்). 1 ஏப்ரல் 1016. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._சுரேஷ்ராஜன்&oldid=3576760" இலிருந்து மீள்விக்கப்பட்டது