வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (Agricultuiral Research Station / ARS), திருப்பதிசாரம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி இயக்கத்தின் கீழ் செயல்படும் ஒரு நிலையம் ஆகும்.

திருப்பதிசாரம்
முதன்மை அலுவலகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

தோற்றம் தொகு

இது 1976 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற நெல் சாகுபடிக் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும் விவசாயிகளின் குறைகளை தீர்க்கவும் இந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது .தொடக்கக்காலத்தில் இந்த ஆராய்ச்சி நிலைய வளாகம் விவசாயத் துறையின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 1981 ஆம் வருடம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு இவ்வளாகம் வழங்கப்பட்டது.

நெல் இரகங்கள் கண்டுபிடிப்பு தொகு

இவ்வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இதுவரை ஐந்து இரங்கள் டிபிஎஸ் (TPS) எனும் பெயரில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. திருப்பதிசாரம் என்பதன் சுருக்கமே டிபிஎஸ் ஆகும்.

  • டிபிஎஸ்-1
  • டிபிஎஸ்-2
  • டிபிஎஸ்-3
  • டிபிஎஸ்-4
  • டிபிஎஸ்-5.

இது எங்கு உள்ளது தொகு

நாகர்கோவில் அருகில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலை (NH 47B) யில் திருப்பதிசாரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து சுமார் 7 கிமீ தூரத்தில் உள்ளது. நால்கால்மடம் என்ற இடத்திலிருந்தும் சுமார் அரை கிமீ தூரம் மற்றும் "ஓட்டாபீஸ்" எனும் இடத்திலிருந்தும் அரை கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

நெல் இரகங்கள் தொகு

இந்த் நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட இரகங்கள் பின் வருமாறு[1]

வெளியிடப்பட்ட இரகங்கள்

ஆண்டு

மூலம்

நாட்கள்

பருவம்

தன்மைகள்

விளைச்சல்

(கி/எக்டர்)

1.

டிபிஎஸ 1

1985

IR 8 கட்டசம்பா

110-115

கன்னிப்பூ

சிவப்பு குண்டு அரிசி (நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று விட்டு நடலாம்)

5000

2.

டிபிஎஸ் 2

1987

IR 26/ Co 40

130-135

கன்னிப்பூ

குண்டு வெள்ளை அரிசி

5000

3

டிபிஎஸ் 3

1993

RP-31-49-2/LMN

135-140

கன்னிப்பூ

குண்டு வெள்ளை அரிசி நீர் தேங்கிய இடங்களுக்கு

6100

4.

டிபிஎஸ்( R) 4

2006

TP 29/ASD 16

85-90

கும்பாபூ

கன்னிப்பூ பருவதில் நேரடி நெல்விதைப்பிற்கு ஏற்றது

6000

5. டிபிஎஸ் 5 2014 ஏஎஸ்டி 16XIR 50 118 அனைத்து பருவம் சன்ன இரகம் 6100

அண்மையில் வெளியிடப்பட்ட ரகம் தொகு

அண்மையில் டிபிஎஸ் 5 என்ற 118 நாளில் 6100 கிலோ நெல்லை அறுவடையாகக் கொடுக்கக்கூடிய புதிய இரகம் வெளியிடப்பட்டது.

மற்ற ஆராய்ச்சிகள் தொகு

  1. விதை நெல் உற்பத்தி
  2. தோட்டக்கலை ஆராய்ச்சிகள்
  3. சுற்றுச்சூழல் மேம்பாடு
  4. பூச்சி நோய் நிர்வாகம்

வேளாண்மைக் கல்லூரி தொகு

இந்த ஆராய்ச்சி நிலையத்தை வேளாண்மைக்கல்லூரி அல்லது தோட்டக்கலைக் கல்லூரியாக மாற்ற முயற்சி நடைபெற்றுக் கொண்டுஇருக்கிறது[2]

ஆராய்ச்சி நிலையப் பண்ணை தொகு

அராய்ச்சி நிலையப் பண்ணையில் மண்புழு உரம் உற்பத்தி, விதை நெல் உற்பத்தி, ஆய்வகம், வாழை, மாமரம், முருங்கை மரங்கள் போன்ற பயிர்கள், ஆடு வளர்ப்பு, வரப்பு புல் (bund grass) மற்றும் மீன்கள் ஆகிய செயல்பாடுகள் நடைபெறுவதால் பண்ணைக்கு உபரி வருமானம் கிடைக்கிறது.

மேற்கோள் தொகு

  1. http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_tirupathisaram.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-02-04.