சே. இராமானுஜம்
பேராசிரியர் சே. இராமானுசம் (1935-07.12.2015) என்பவர் கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் நன்கு அறியப்பட்ட நாடகவியலாளர் ஆவார். தமிழின் நவீன நாடகத்தின் தந்தை எனப் புகழப்படும் இவரை நாடக இராமானுஜம் என்று அவர் நண்பர்கள் சிலர் குறிப்பிடுவர்.
வாழ்வு
தொகுசே. இராமானுசம் தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி என்னும் சிற்றூரில் 1935ஆம் ஆண்டில் பிறந்தவர். [1] இவர் தொடக்க காலத்தில், காந்தியடிகளால் பரிந்துரைக்கப்பட்ட ஆதாரக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தும் தொடக்கபள்ளி ஆசிரியராக காந்திகிராமத்தில் பணியாற்றினார். அங்கு அவரின் நாடக ஆர்வத்தைக்கண்டு அப்பல்கலைக்கழகத்தில் அவருடன் பனியாற்றிய ஜி. சங்கரப் பிள்ளை, எஸ்.பி. சினிவாசன் ஆகியோர் தந்த ஊக்கத்தால் தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் 1963ஆம் ஆண்டில் சேர்ந்தார். அங்கு புகழ்பெற்ற நாடக ஆளுமையான இப்ராகிம் அல்காஜியிடம் பயின்று 1967 இல் நாடகப் படிப்பை முடித்தார். [1] பின்னர் 1967 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் நுண்கலை விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.[1]
நாடகப்பணிகள்
தொகு1978 முதல் 1985 வரை திருச்சூரில் அமைந்துள்ள கோழிக்கோடு பல்கலைக்கழக நாடகப் பளிளியில் உதவி இயக்குநராகவும், 1985 முதல் 1995 வரை தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.[1] தமிழ்ப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு, புதுவை, ஐதராபாத், பல்கலைக்கழகங்களில் நாடகக் கல்விக்கான அடிப்படையான வரைவுத்திட்டங்களை உருவாக்கினார். இவர் நூற்றுக்கணக்கான நாடக பயிலரங்குகளை நாடு முழுவதும் நடத்தியும், 50க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுமுள்ளார்.
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "இராமானுசம் பற்றி நாடக சங்கீத அகாதமி வெளியிட்டுள்ள குறிப்பு". Archived from the original on 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-11-23. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.