காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்

காந்தியம்

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் (Gandhigram Rural University) இந்தியாவின் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல் நகருக்கு அருகில் இப்பல்கலைக் கழகம் அமைந்துள்ளது.

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
Other nameகள்
காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்
காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்அண். 1956 (1956)[1]
வேந்தர்கே.எம். அண்ணாமலை [2]
துணை வேந்தர்குர்மித் சிங் (கூடுதல் பொறுப்பு)[3]
அமைவிடம்
திண்டுக்கல் , காந்தி கிராமம்
,
வளாகம்சிறுமலை மலைத் தொடர்
சேர்ப்புமனிதவள மேம்பாடு, பல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்GRI's Official website
தமிழ்த்துறை

வரலாறு தொகு

முனைவர் டி.எசு. சௌந்தரம் மற்றும் முனைவர் சி.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கினர். காந்திகிராம கிராமிய உயர் கல்வி நிறுவனம் 1956-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அறிவு மற்றும் வேலை ஆகியவை தனித்தனியானவை அல்ல என்று குறிப்பிடுகின்ற ஒரு கொள்கையால் அமைந்த சர்வோதயக் கல்வி முறையைத் தொடர்வதற்காக இதை அவர்கள் உருவாக்கினர். புது தில்லியைச் சேர்ந்த பல்கலைக்கழக மானியக் குழு அதன் மூன்றாவது சட்டப் பிரிவு 1956 இன் கீழ் 1976-ஆம் ஆண்டு காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அறிவித்தது. இதன்படி 1976-ஆம் ஆகத்து மாதம் 3 ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகமாக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் மாறியது. இப்பல்கலைக் கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி இப்பல்கலைக் கழகம் காந்திகிராம கிராமிய நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

‘வாழ்க்கைக்கான கல்வி; வாழ்க்கை மூலம் கல்வி; வாழ்க்கை முழுவதும் கல்வி’ என்ற புரட்சிகரமான காந்தியக் கல்வியின் அடிப்படை, தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது என்பதை மையமாகக் கொண்ட சர்வோதய கல்வி முறையைக் காந்திகிராம கிராமப்புற நிறுவனம் கல்வித் திட்டங்களை உருவாக்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் காந்திகிராமத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஊரக வளர்ச்சி, ஊரகப் பொருளாதாரம் மற்றும் விரிவாக்கக் கல்வி, கிராமப்புறம் சார்ந்த அறிவியல், ஒத்துழைப்பு, மேம்பாட்டு நிர்வாகம், கிராமிய சமூகவியல் போன்ற பாடப் பொருள்களை மையமாக வைத்து தமிழ் மற்றும் இந்திய மொழிகள், ஆங்கிலம் மற்றும் சில வெளிநாட்டு மொழிகள் போன்றவற்றில் புதிய கல்வித் திட்டங்களை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்தக் கிராமிய நிறுவனம் ஒரு பெரிய கல்வி வளாகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இங்குள்ள ஏழு பிரிவுகளில் 50 கல்வித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இது கிராமப்புற மேம்பாடு, கிராமப்புற சமூக அறிவியல், கிராமப்புற சார்ந்த அறிவியல், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள், தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமிய கலைகள், கிராம சுகாதாரம் மற்றும், விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு போன்ற துறைகளில் இளங்கலை பாடப் பிரிவுகள், முதுகலைப் பாடப் பிரிவுகள், முனைவர் பட்டப் படிப்புகள் போன்றவை இதில் அடங்கும்.

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் 3000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். கற்பித்தல் பணியில் 150 பேராசிரியர்களும் கற்பித்தல் அல்லாத இதர அலுவலகப் பணிகளில் 250 அலுவலர்களும் பணிபுரிகின்றனர்.

தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் அமைப்பு 2002-ஆம் ஆண்டு பிப்ரவரியில் காந்திகிராம கிராமிய நிறுவனத்திற்கு ஐந்து நட்சத்திரக் குறியீடு தகுதியை அளித்து சிறப்பித்தது. மீண்டும் 2010-ஆம் ஆண்டு இதே அமைப்பு இந்நிறுவனத்திற்கு ஏ என்ற குறியீட்டுத் தரநிலையை வழங்கி மறு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சமீபத்தில் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற தகுதியும் காந்திகிராமம் கிராமிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

மதுரை செல்லூர் உபாத்தியாயர் மருத்துவர் எச்.தமிழரசன் இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களுள் ஒருவர் ஆவார் .

வளாகம் தொகு

காந்திகிராம கிராமிய நிறுவனம் கிராமப்புற அமைப்பில் கிட்டத்தட்ட 200 ஏக்கர் (0.81 கி.மீ 2) பரப்பளவில் ஒரு வளாகத்தைக் கொண்டுள்ளது. அழகான சிறுமலை, மலைத் தொடரில் சுற்றிலும் எழில் கொஞ்சும் ஓர் உறைவிடத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ளது. அதன் மேற்கில் கொடைக்கானல் மலைப்பிரதேசம் உள்ளிட்ட மலைகளின் சங்கிலித் தொடர்கள் உள்ளன. மதுரைக்கு வடக்கே அமைந்துள்ள காந்திகிராமத்தை இரயில் மற்றும் சாலை வழியாக எளிதில் செல்ல முடியும். ஆண்டு முழுவதும் காலநிலை வெப்பம் மிகுந்த காலநிலையாக இருக்கும்.

போக்குவரத்து தொகு

காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள இரயில் நிலையம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாதுரை இரயில் சந்திப்பு நிலையம் ஆகும். அருகிலுள்ள முக்கிய நகரமும் திண்டுக்கல் நகரமேயாகும். காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்திற்கு மிக அருகில் மதுரை விமான நிலையம் இருக்கிறது.

தரவரிசை தொகு

காந்திகிராம கிராமிய நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் 79-ஆவது இடத்தைப் பிடித்தது மற்றும் ஒட்டுமொத்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் 101–150 இடத்தை பிடித்தது.

தமிழ்த்துறை தொகு

காந்திகிராமம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்துறையில் தற்போது சுமார் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர்

இவற்றையும் பார்க்கவும் தொகு

டாக்டர் ஜி. இராமச்சந்திரன் நூலகம்

மேற்கோள்கள் தொகு

  1. https://www.ruraluniv.ac.in/aboutgri?content=profile
  2. ""Chancellor"".
  3. https://www.careers360.com. "Pondicherry University Vice-Chancellor assumes additional charge of institute in Tamil Nadu". news.careers360.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14. {{cite web}}: External link in |last= (help)CS1 maint: numeric names: authors list (link)

புற இணைப்புகள் தொகு