டாக்டர் ஜி. இராமச்சந்திரன் நூலகம்

டாக்டர் ஜி. இராமச்சந்திரன் நூலகம் என்னும் நூலகம் மதுரை-திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் சின்னாளப்பட்டிக்கு அடுத்த நிறுத்தமான காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தின் நூலகம் ஆகும்.

இந்நூலகம் 1956-இல் தொடங்கப்பட்டுத் தற்போதைய கட்டடத்திற்கு 1984-இல் இடம்பெயர்ந்தது. இங்கே ஒருலட்சத்து அறுபதாயிரம் நூல்கள் உள்ளன. அனைத்துத் துறைசார்ந்த புத்தகங்களும் உள்ளன. குறிப்பாகக் காந்தியடிகள் நடத்திய யங் இந்தியா, ஹரிஜன் இதழ்களின் தொகுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. காந்தியடிகள் எழுதிய எல்லாவற்றையும் தொகுத்து வெளியான 100 தொகுதி நூல்களும் இங்கே உள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு