நாடார் இந்து உயர்நிலைப் பள்ளி
நாடார் இந்து உயர்நிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தின் கீழப்பாவூரில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியாகும். இங்கு 10ஆம் வகுப்புவரை கற்பிக்கப்படுகிறது.
நாடார் இந்து உயர் நிலைப் பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
கீழப்பாவூர், தென்காசி., தமிழ்நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | அரசு உதவி பெறும் பள்ளி |
குறிக்கோள் | கல்வி |
தொடக்கம் | 1939 |
தலைமை ஆசிரியர் | மஞ்சு செல்வம் |
வளாகம் | கிராமம் |
வரலாறு
தொகுஇப்பள்ளியானது கீழப்பாவூரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட தியாகியான ப. ஆறுமுகநயினாரால் 1939இல் துவக்கப்பள்ளியாக தோற்றுவிக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டு இந்தப் பள்ளி நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது. பின்னர் இந்தப் பள்ளி 1990-91 கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது. விளையாட்டு மைதானம் உட்பட ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள இப்பள்ளியில், 2018 ஆண்டின்படி கீழப்பாவூரைச் சேர்ந்த மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 850 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள் உட்பட 33 பேர் பணியாற்றுகின்றனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ த.அசோக்குமார் (11 நவம்பர் 2018). "பெரியம்மா டீச்சர்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2018.