நாடு கடந்த இந்திய அரசின் அஞ்சல் தலைகள்
வெளியிடப்படாத அஞ்சல் தலைகள்
நாடு கடந்த இந்திய அரசின் அஞ்சல் தலைகள் (Azad Hind stamps) என்பது சுபாஷ் சந்திர போஸின் கீழ் உருவான நாடு கடந்த இந்திய அரசின் தற்காலிக அரசாங்கத்திற்காக தயாரிக்கப்பட்ட ஆனால் வெளியிடப்படாத அஞ்சல் தலைகள் ஆகும். அனைத்து அஞ்சல் தலைகளும் பெர்லினிலுள்ள அரசு அச்சகப் பணியகமான இரீச்சுடுக்கரேயில் 100 தாள்களில் போட்டோகிரேவர் முறை மூலம் அச்சிடப்பட்டன.[1]
பின்னணி
தொகு"சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கம்" இரண்டாம் உலகப் போரின்போது சப்பானின் ஆதரவுடன் நாடு கடநத அரசாங்கமாக சுபாஷ் சந்திர போஸால் நிறுவப்பட்டது. இந்த அரசாங்கத்திற்காக, நாட்சி ஜெர்மனியில் அஞ்சல் தலைகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டன. இந்த அஞ்சல் தலைகள் 1943ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெர்லினில் இருந்தபோது போஸ் அவர்களால் தொடங்கப்பட்டது.[2]
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- Michel Deutschland-Spezial 2018. Schwaneberger Verlag GmbH, München 2018.
- Indian Legion Stamps and Postal History in Introduction to Foreign Legion Stamps and Postal History.
சான்றுகள்
தொகு- ↑ Andrew Freeston: The Azad Hind and Chalo Delhi Stamps of the Indian Legion and Indian National Army of Subhas Chandra Bose 1941–1945. Waikawa Beach, New Zealand: 1999, p. 9.
- ↑ "Barth Healey: Pastimes;stamps". nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.