இந்தியத் தேசிய இராணுவம்

இந்திய விடுதலைப் போராட்டம், சுபாசு சந்திர போசின் பற்று

இந்தியத் தேசிய இராணுவம் (Indian National ArmyINA) என்பது இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய இராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.

இந்தியத் தேசிய இராணுவம்
செயற் காலம்August 1942 – September 1945
நாடுவார்ப்புரு:நாட்டுத் தகவல் Azad Hind
பொறுப்புகரந்தடிப் போர் முறை, காலாட் படை, special operations
அளவு43,000 (approximate)
குறிக்கோள்(கள்)Ittehad, Itmad aur Qurbani
(Unity, Faith and Sacrifice in Urdu)
அணிவகுப்புKadam Kadam Badaye Ja
சண்டைகள்இரண்டாம் உலகப் போர்
தளபதிகள்
Ceremonial chiefசுபாஷ் சந்திர போஸ்

1942 இல் சிங்கப்பூர் சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், ராஷ் பிஹாரி போஸ் என்பவரால் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. இதன் படைத்தலைவர் மோகன் சிங் ஆவார். ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல் நேதாஜி சுபாஷ் சந்திர போசினால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது. போசின் இந்திய இடைக்கால அரசின் படைத் துறையாக செயலாற்றியது. சப்பானியப் படைகளுக்குத் துணையாக மலேசியா மற்றும் பர்மா போர்த் தொடர்களில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது. சப்பானிய மற்றும் பிரித்தானியத் தரப்புகள் தங்களது தேவைகளுக்கு இப்படையினை பெரிய அளவில் பயன்படுத்துக்கொண்டன. சுமார் 43,000 உறுப்பினர்களைக் கொண்ட இப்படை போர்க்களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இதன் உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசு சாட்டிய குற்றங்களும், அது தொடர்பான வழக்குகளும் இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

அடக்குமுறைத் தன்மையோடு இந்தியா இரண்டாம் உலகப் போரில் இறக்கிவிடப்பட்டதற்கு 1937 மற்றும் 1939 இல் இரண்டுமுறை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் போஸால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த போரில் பங்கேற்பதற்கு எதிராக முயற்சி எடுத்ததற்குப் பின்னர் அவர் 1939 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இவருக்கு பக்க பலமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கட்சியில் இருந்தார்.போர் வெடித்தபோது பிரித்தானிய அரசு அவரை 1940 ஆம் ஆண்டு கல்கத்தாவில் வீட்டுசசிறையில் அடைத்தது. இருப்பினும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்தப் போர் அதிக இரத்தம் சிந்தப்பட்டுக்கொண்டிருக்கையில் தப்பிச்சென்ற அவர் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச்சென்று பிரித்தானிய அரசுடன் போரிடுவதற்கான இராணுவத்தை உருவாக்க இரண்டாம் உலகப்போர் அச்சு நாடுகளிடம் உதவி கோரினார். இங்கே அவர் இர்வின் ரோமலின் இந்தியப் போர்க்கைதிகளை வைத்து இந்திய தேசிய இராணுவம் என்று பிரபலமான இராணுவத்தை உருவாக்கினார். பிரித்தானிய அரசுடன் போரிடுவதற்கு விடுதலைப் படையை உருவாக்குதல் என்ற போஸின் இளம்பருவ கனவினுடைய கருத்தாக்கமாக இது வந்துசேர்ந்தது. சுதந்திர அரசாங்கமாகவுள்ள ஆஸாத் ஹிந்த் அரசாங்கம் என்று பிரபலமான இயக்கத்தை சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கினார். ஜப்பானிலும் தென்கிழக்காசியாவிலும் தனது வழியை அமைத்துக்கொண்டார். அத்துடன் அவர் இந்தியப் போர்க்கைதிகளுடன் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் இணைந்து இந்திய தேசிய ராணுவத்தையும் ஜப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதனுடைய நோக்கம், பிரித்தானிய இராஜ்ஜியத்திற்கு எதிராக இந்தியப் படைவீரர்களுக்கிடையே கலகங்களைத் தூண்டும் விதமாக பொதுமக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தும் போரிடும் படையாக இந்தியாவை அடையவேணடும் என்பதே.

இந்திய தேசிய இராணுவம் பர்மாவின் அரகான் காடுகள் மற்றும் அஸ்ஸாமில் பிரித்தானிய இந்திய இராணுவம் உள்ளிட்ட கூட்டுப்படைகளின் எதிர்ப்பைக் கண்டது, ஜப்பானியர்களின் 15 வது இராணுவத்துடன் இம்பால் மற்றும் கோஹிமாவை முற்றுகையிட்டது. இந்தப் போரின்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்டு இந்திய தேசிய இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது; போஸ் அவற்றிற்கு ஷாகித் (தியாகம்) என்றும் சுவராஜ் (சுதந்திரம்) என்றும் பெயரிட்டார்.

தடங்கலான அனுப்புகைகள், ஜப்பானியர்களிடமிருந்து பெற்ற மோசமான ஆயுதங்கள் மற்றும் அளிப்புக்கள் மற்றும் பயிற்சி உதவியின்மை ஆகியவற்றால் இந்திய தேசிய இராணுவம் தோற்றுப்போயிருக்கலாம். போஸ் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது முழு ஆஸாச் ஹிந்த் இயக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்திய தேசிய இராணுவத்தின் துருப்புக்கள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டனர். இருப்பினும் போஸின் துணிச்சலான நடவடிக்கைகளும் அடிப்படைவாத முன்முயற்சியும் அந்த நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கிறது. பிரித்தானிய பேரரசு கூட்டாளிகளாக கருதப்பட்ட பிரித்தானிய இந்திய போர்வீரர்கள் சொந்த நாட்டு விசுவாசமாகத் தூண்டுவதாகவும் அமைந்தது.[1][2]

ஐஎன்ஏ வழக்குகள் (INA trials) அல்லது செங்கோட்டை வழக்குகள் (Red Fort Trials) என்பது பிரித்தானிய இந்தியாவில் நவம்பர் 1945-பெப்ரவரி 1946 காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் (ஐஎன்ஏ) உறுப்பினர்கள் சிலர் மீது பிரித்தானிய அரசு தொடர்ந்த வழக்குகளைக் குறிக்கிறது. இந்திய தேசிய இராணுவப் போர்வீரர்களின் விசாரணையின்போது வெளிச்சத்திற்கு வந்த ஆஸாத் ஹிந்த் மற்றும் அதன் இராணுவத்தின் கதைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் வெகுமக்கள் கலகங்களும் கிளர்ச்சிகளும் ஏற்படலாம் என்ற அச்சத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்வதாக இருந்தது, பிபிசி அவர்கள் கதையை ஒலிபரப்புவதை பிரித்தானிய அரசாங்கம் தடைசெய்தது.[3] செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தினருக்கு கூட்டாக தண்டனை நிறைவேற்றப்பட்டதை செய்தித்தாள்கள் தெரிவித்தன.[4] விசாரணையின்போதும் அதற்குப் பின்னரும் பிரித்தானிய இந்திய ஆயுதப் படைகளுக்கிடையே கலகங்கள் மூண்டன, அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது ராயல் இந்திய கடற்படை கராச்சியிலிருந்து மும்பை வரை மற்றும் வைசாக்கிலிருந்து கொல்கத்தா வரையிலுமாக இந்தியா முழுவதிலும் பொதுமக்கள் ஆதரவைக் கண்டதாகும்.[5][6] இந்தியாவின் இறுதிக்கட்ட சுதந்திரத்திற்கான முக்கிய இயக்கு சக்தியாக இருந்தவை பிரித்தானிய இந்திய ஆயுதப் படையினருக்கிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய தேசிய இராணுவமும் அதனுடைய கலகங்களும் ஆகும் என்று பல வரலாற்றாய்வாளர்களும் வாதிடுகின்றனர்.[7][8][9] குறிப்பாக, இந்திய தேசிய இராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. எட்வர்ட்ஸ், மைக்கேல், பிரித்தானிய இந்தியாவின் கடைசி ஆண்டுகள், கிளிவ்லேண்ட், வேர்ல்டு பப். கம்., 1964, ப. 93 .

    இந்திய தேசிய இராணுவ உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுப்பதன் மூலம் இந்திய இராணுவத்தின் ஒழுக்கத்தை மறுசீரமைக்க முடியும் இந்திய அரசாங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பிரிட்டிஷாருக்கு அசௌகரியத்தையும், தாங்களே வெட்கமடையும் வகையிலுமான உணர்வையுமே உருவாக்கியது. போஸூம் அவரது படையினரும் சரியான பக்கத்தில் இருந்தவர்கள் என்று இப்போது எல்லா இந்தியர்களும் உறுதிசெய்துவிட்டனர் - பிரித்தானிய இராணுவத்திலிருந்த இந்தியர்கள் சரியான பக்கத்தில் இருக்கவில்லை. பிரித்தானிய ஆட்சிக்கு முதுகெலும்பாக இருந்த இந்திய இராணுவம் இனிமேலும் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்காது என்பதை அது இந்திய அரசாங்கத்திற்கு உணர்த்தியது. ஹாம்லெட்டின் தந்தையைப் போல் சுபாஷ் சந்திரபோஸின் ஆவியும் செங்கோட்டையின் போர்ப்பாதையில் நடந்துசென்றது (இந்திய தேசிய இராணுவ வீரர்கள் முயற்சித்தது), சுதந்திரத்தை வழிநடத்திய அவர் உருவம் சட்டென்று பெரிதாகி பிரித்தானிய அரசினை பயமுறுத்தியது.

  2. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா . [1] இந்திய தேசிய இராணுவம் இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர் இந்திய தேசிய இராணுவத்தின் அனுபவசாலிகள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு சிக்கலான பிரச்சினையாக விளங்கினர். இந்திய தேசிய இராணுவத்தின் உறுப்பினர்களின் ஒரு பகுதியை ராஜதுரோகத்திற்கான பொது விசாரணைக்கு உட்படுத்த பிரித்தானிய அரசாங்கம் பயந்ததானது எதிர் பிரிட்டன் உணர்வு மற்றும் பரவலான போராட்டம் மற்றும் வன்முறை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். 19 ஆகஸ்ட் 06 இல் அனுகப்பட்ட URL.
  3. கலகங்கள் (கடைசி பிரிவு).
  4. இந்திய தேசிய இராணுவத்தினர் பலரும் முன்பே தண்டனை நிறைவேற்றப்பட்டனர் பரணிடப்பட்டது 2007-08-09 at the வந்தவழி இயந்திரம், லக்னோ. தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், 2 நவம்பர் 1945. 11-ஆகஸ்ட்-06 இல் அனுகப்பட்ட URL.
  5. கலக விளைவுகளின் கதையும் மதிப்பீடும்.
  6. டிரிப்யூன் இண்டியா, 17-ஜூலை-2006 இல் அனுகப்பட்டது
  7. "ஆர்ஐஎன் கலகம் பிரிட்டிஷாரை உலுக்கிய" தன்செயா பட், தி டிரிப்யூன், 12 பிப்ரவரி 2006, 17 ஜூலை 2006 இல் திரும்ப எடுக்கப்பட்டது
  8. மஜும்தார், ஆர்.சி., இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மூன்று நிலைகள், பம்பாய், பாரதீய வித்யா பவன், 1967, பக். 58–59.
  9. ஆர்.சி.மஜூம்தார். இந்திய சுதந்திர இயக்கங்களின் வரலாறு. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8364-2376-3, மறுபதிப்பு. கல்கத்தா, ஃபிர்மா கேஎல்எம், 1997, தொகுதி. III.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தேசிய_இராணுவம்&oldid=3874922" இலிருந்து மீள்விக்கப்பட்டது